பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 இப்பாடல் மூன்று முறை பாடப்படும். பெரியவன் ஒர் அடியைச் சொல்லுவான். ஏனையோர் அடியின் இறுதிச் சொல்லச் சொல்லுவர். பாடல் பாடப்படும் பொழுது மேற்குப்புறம் தவிர மற்ற முப்புறமும் மக்கள் சூழ்ந்து நிற்பர். இறந்தவனின் பாவங்கள் எல்லாம் பாவங் தாங்கி "யாக நிற்கும் மற்ருெருவனுக்கு மாற்றப்படும்: இறுதியில் அவனிடமிருந்து மேற்கு வழியாகப் பாவங்கள் சென்றுவிடும் என்பது படகர் நம்பிக்கை. அந்தப் பாவங் தாங்கியும், தொரியாவும் பின்னர் இழவு வீடு செல்வர். தெரு உணவு எனப் படகரால் அழைக்கப்படும் சாமைத் தானியத்தைக் கொஞ்சம் எடுத்து இலேயில் வைத்து மூன்று முறை நீர் தெளிப்பார்கள். - * . . . இது பற்றித் திரு. கார்க்னிசு கூறுவதாவது :- " இறந்த வன் மகனே வாரிசாகப் பிணத்தின் வாயில் சிறிது தானியத் தைப்போடுவான். அப்போது, இறந்தவனிடமுள்ள கெட்ட ஆவிகள்னின்றும் தன்னைக் காத்துக் கொள்வதற்காகத் தன் இடக்கையில் ஓர் இரும்புத் துண்டை அவன் வைத்துக் கொள்வான்.' o இவ்வாறு வாயில் தானியம் போடல் வாய்க்கரிசி எனப்படும். கொள்ளிக்குடம் எடுப்போர் செத்தவன் வாயிலே அரிசி வைத்தலே வாய்க்கரிசி எனப்படும். பேய்பூதங் கள் இரும்புக்கு அஞ்சும் என்ற நம்பிக்கை இன்றும் பாமர மக்களிடம் நிலவி வருகிறது. - பிற செய்திகள் : - பாவ மன்னிப்புப் பாடல் பாடுகின்றவன் அப்பாட8லப் பாடும்பொழுது தாளம் போடுவான். காலும் தாளத்துக் கேற்றவாறு மேலும் கீழும் செல்லும். இறந்தவன். பாவங்கள் பல செய்ததாக அவன் கருதிக் கொண்டு, ' இறைவனது தூய திருவடிகளே இவன் அடையவேண்டும். எனவே பாவங்கள் பறக்கட்டும்' எனக் கத்துவான். அவன் கத்தி முடிந்ததும், ' குற்றங்கள் எல்லாம் ஒடட்டும்" என்று கூடியிருப்போரும் கூறுவர்.