பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 மறுபடியும் முதியவன் இவ்வாறு கூறத்தொடங்குவான்: "இவன் ஊரும் பாம்பைக் கொன்ருன் , அது ஒரு பாவம்.” பின்னர் எல்லோரும் அது ஒரு பாவம்' என்பர். இவ்வாறு இவர்கள் சொல்லும் பொழுது முதியவர் ஒருவர் எருமைக் கன்றின் மீது கைவைத்துக் கொண்டிருப்பார். அதன் பொருள், குற்றங்கள் கன்றின் மீது சாட்டப்பட்டு விட்டன என்பதாகும். இவ்வாறு குற்றப்பட்டியல் முழுதும் படிக் கப்படும். முதியவன் ஒருவன் ' எல்லாம் நன்ருகவே முடியட்டும் " என்று கூறி முடித்ததும், அடுத்து ஒருவன் வந்து மறுபடியும் குற்றப்பட்டியலைப் படிப்பான். பின் எல்லோரும் இது ஒருபாவம் என்பர். பின் ஒருவன் வந்து கத்துவான். கடைசியாக முழு அமைதி நிலவும். கன்று அவிழ்த்து விடப்படும். L. தோதவரும் இப்படியே ஒரு கன்றைப் பயன்படுத்து வர். கோத்தரும் கன்றைப் பாவச் சுமை தாங்கியாகக் கருதுகின்றனர். தோத்தரும், படகரும் கன்றின் கழுத்து மணியைக் கழற்றிவைத்துக்கொள்வர். தோதவர்கள் அப் படிச் செய்யார். இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கும் போது, தோதவர் இப்பழக்கத்தைக் கோத்தரிடமிருந்தாவது, படகரிடமிருந்தாவது கற்றிருக்கவேண்டும் என்று தோன்று கிறது, - - சூலியாக இருக்கும் பொழுது கணவன் இறந்தால்... ? மனைவி சூலியாக இருக்கும் பொழுது, கன்னி கட்டொடு நடக்காமலே கணவன் இறந்துவிட்டால், அதன்பின் பிறக் கும் குழந்தை சட்டப்படி அவன் குழந்தையாகாது. எனவே பிணம் சுடுகாடு செல்லுமுன் ஒருவிதச் சடங்கு நடைபெறும். அவள் பாடையருகில் கொண்டுவரப்படுவாள். இறந்த வனது நெருங்கிய உறவினன் ஒருவன் ஒரு பருத்தி நூலே எடுத்து, முடிச்சேதும் இன்றித் தாலிபோல் செய்து, அவளது கழுத்தைச் சுற்றி எறிவான். சில சமயங்களில் இறந்தவன் கையாலும் நூலே எறியுமாறு செய்வர். பிறகு, அவளது அணிகள் எல்லாம் கழற்றி வைக்கப்படும். மன்னிப்புப் பாடல் முடிந்ததும் உறவினர் எல்லோரும் இழவு