பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வீடுசெல்லுர். இழவு வீட்டின் முன் ஒரு சாக்கில் நெல்லும் மாட்டுச் சாணமும் இன்ன பிறவும் வைக்கப்பட்டிருக்கும். உறவினன் ஒருவன், ஒரு கையில் அரிவாளும் ஒரு கையில் நெல்லும் கொண்டு, இரண்டையும் நெற்றிக்கு உயர்த்திப் பிடித்து நடப்பான். பிறகு ஆடவரும் பெண்டிரும் அவ் வாறே செய்து கொண்டு வரிசையாக நடந்து பிணத்தை நோக்கிச் செல்வர், பிணத்தை, ஆண்கள் இடமிருந்து வல மாகவும், பெண்கள் வலமிருந்து இடமாகவும் மும்முறை சுற்றி வருவர். ஒவ்வொரு சுற்று முடிவிலும் பிணத்தின் முகத்தில் சிறிது கெல்லைப் போடுவர். எல்லோரும் பிணத்தோடு சுடுகாடு செல்வர். முன்னல் வழி நெடுகிலும் தன் முன்கையை வீசிக்கொண்டே ஒரு பெண் செல்வாள். பின், அடுக்கப்பட்ட கட்டைகள் மீது பிணம் வைக்கப் படும். தலைமாட்டில் நிற்கும் மூத்த மகன் தீ மூட்டுவான். பாடைக் கம்புகளும் எரிக்கப்படும். சில இடங்களில் கொள்ளி வைக்கும் மகன் ' என் தந்தையாலும் அம்மையாலும் பெற்றெடுக்கப்பெற்ற நான், எனது முன்னேர் கையாண்ட முறைப்படி இங்குள்ள எல்லோர் முன்பும், தேவன் முன்பும் என் தங்தை சவத்தின் தலையில் தீ வைக்கிறேன் என்பான். மறுநாள், படகர் அனைவர்க்கும் அரிசி தரப்படும்’ இறந்தவனின் உறவினர், இரு புதுப்பானைகளோடு சுடுகாடு சென்று, எலும்புகளைப் பொறுக்கி வருவர். பிறகு அவை ஒரு தட்டில் வெண்ணெய் முதலிய பொருள்களோடு வைக்கப்படும். வயதில் இளையவராக இருப்பவர்கள், இறந்த வனின் எலும்பைத் தொட்டு வணங்குவர். பிறகு எல்லோ ரும் எலும்புத்தட்டோடு எலும்புக் குழிக்குச் செல்லுவர். அதனுள் எலும்புகள் எறியப்படும். ஊருக்கு ஒர் எலும்புக் குழி இருக்கும். எலும்புகள் எறியப்படும் பொழுது, ஒரு முதியவன், 'நீ திரும்பவும் வந்து உன் உறவினரிடம் சேர்ந் திடுக ! என்பான். இல்லையேல் இதுவரை இறந்த எல் லோரும் இளையாரும் முதியாரும் ஒன்ருகக் கலப்பாராக ! " என்பான். எலும்புக்குழி மூடப்பட்டதும் எல்லோரும் சுடு காட்டுக்குத் திரும்புவர். அங்கோர் இடத்தைத் தூய்மை