பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வைக்கப்படும். அந்தக் கத்திகள் பெரும்பாலும் இழவிலே பயன் படுத்தப்பட்டனவாகவே இருக்கும். படகர்கள் வந்து வந்து அந்த ஆயுதங்களே வணங்கிச் செல்வர். இந்தச் சடங்குகள் நடந்தபிறகு நெல்லரைத்து அரிசி யாக்கி உப்புப் போடாது சோருக்குவர். பின், இறந்தவ னின் மூத்தமகன் ஒரிலையில் ஏழுருண்டை வைத்துக் கூரை மீது எறிந்து விடுவான். அவ்வாறு எறியும்போது தன் முன் னேர் பெயர்கள் பலவற்றையும் சொல்லுவான். பின்னர் உற வினரும் அவனும் சோற்றை உண்பர். இன்னும் சில இடங் களில் சோற்றை முழுவதும் ஏழுருண்டைகளாக உருட்டி வீட்டு முற்றத்தில் வைத்து அதிலே கொஞ்சம் சோறெடுத்து அச்சோற்ருேடு நீரையும் சேர்த்துக் கூரைமேல் எறிதலும் உண்டு. இவ்வாறு சோற்றுக்கு முன் கூடியுள்ள படகரில் முதியவன் ஒருவன் எழுந்து பின்வருமாறு மொழிவான்: இன்று நம் முன்னேர் கையாண்ட வழிகளே நாமும் கையாண்டு செயல்பட்டோம். பழையவை புதியவையாகா: புதியவை எவையும், பழையனவாக மாறமாட்டா. எவனும் தலையைத் தாங்கிக் கொண்டு இருக்கவில்லை. அல்லது எந்தப் பெண்ணும் . மார்பைத் தாங்கிக் கொண்டிருக்கவில்லை; எனவே அவர்கள் தத்தம் சாதி. இனங்களோடு, ஒன்று படட்டும்' உடையார் இறுதிக்கடன்: உடையாரின் கருமாதி படகரின் கருமாதியினின்றும் மாறுபட்டதாகும். இறுதி நாளன்று, ஈதை-பசு ஒன்றும், காயடிக்கப்பட்ட இளங்காள ஒன்றும் பிடித்து வரப்படும். பின்னர் அவற்றின் தொடைகளிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பால் இலிங்கம் முதலிய குறிகள் இடப்படும். பின்னர் அம்மாடுகள் ஆடையாலும் நகைகளாலும் அழகு படுத்தப் படும். அதன் பின் பிணத்தருகில் விரிக்கப்பட்ட ஒரு போர்வைமேல் நிறுத்தப்படும். தேங்காய் முதலியனகொண்டு அவற்றிற்குப் பூசை நிகழும். மலர்கள் அம்மாடுகள் மீது துவப்படும். இத்தனையும் முடிந்தபிறகு பெரியவன் ஒருவன் பாவமன்னிப்புப் பாடலைப் பாடுவான். பிறகுதான்