பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. அ பிணம் புதைக்கப்படும். உடையார்கள், அமர்ந்த கோலத்தில் தான் பிணத்தைப் புதைக்கின்றனர். அவ்வாறு புதைக்கும் போது ஏற்கெனவே பிணம் புதைக்கப்பட்ட குழிகளேயே இருளர்கள் போன்று இப்படகரும் நாடுகின்றனர். புதைகுழி யின் நான்கு மூலேகளிலும் ஒருவிதச் செடி நடப்படும். பிறகு பருத்திநூல் ஒன்றைப் புதைகுழி மீது அங்கும் இங்குமாகச் சுற்றி விடுகின்றனர். இதற்கிடையில் இருவர் குழிக்குள் இறங்கிப் பிணத்துக்கருகில் இரு ஒளிவிளக்குகளே வைப்பர். மனவலை * மாண்டவரை நினைந்து பல ஆண்டுக் கொருதரம் கொண்டாடும் சட்ங்குக்கு மனவலை எனப்பெயர். இந்நினைவு நாள் கொண்டாடப்படும் முறை சுவையுடையது. மரத்தாலும் மூங்கிலாலும் ஏழு தட்டுக்களை உடைய தேர் ஒன்று செய்யப்படும். பின் அத்தேர் கம்பளித் துணியாலும் குடை, கொடி முதலியவற்ருலும் அ ழ கு செய்யப்படும். தேரின் கீழ்த் தட்டில் ஒரு கட்டிலில் ஒரு ரூபா யும், வாழைத்தண்டும், பழமும், தலையணையும் இருக்கும். இவை வைப்பதற்கு ரிய காரணம் என்ன வென்ருல், முன் னேர்கள் அக்கட்டிலிற் படுப்பதாகவும், வாழைப்பழம் தண்டு ஆகியன உண்பதாகவும், வெய்யில், மழைகளுக்குத் தம் குடை களேப் பிடித்துக் கொள்வதாகவும் படகர் நம்புகின்றனர், மேற்கூறிய பொருள்களோடு இறந்தார் அனைவருடைய காதணிகளும் அக்கட்டிலில் வைக்கப் பட்டிருக்கும். இந்த விழா நடக்கும்போது தெருவெங்கும் பல திருவிழாக்கடைகள் காட்சியளிக்கும். இந்த விழாவிலே கலந்து கொள்ளுமாறு அக்கம் பக்கத்திலுள்ள ஊர் மக்களும் அழைக்கப்படுவார் கள். இவ்வாறு வருவோரைக் கோதவர்கள் பாடிச் சென்று தேரினருகில் அழைத்து வருவர். வந்தபுதியவர், தலைப்பாகை யைக் கழற்றித் தலையணை மீது தலைவைத்து எடுப்பார். அதன்பின் நடக்கும் கூத்தில் அவர்கள் கலந்து கொள்ளுவர். சிவப்பு அல்லது நீலக் கரைகளுடைய வெள்ளே நிறப் பருத்தி யாடை, அல்லது பட்டாடை உடுத்திச் சட்டையும், வேறுதுணி களும் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாகக் கோயிலுக்