பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வேர்களைக் கொண்டுவந்து, நீரில் (மீன்கள் நன்கு அலேந்து கொண்டிருக்கும் நீர்) கரைத்து விடுவார்கள். உடனே மீன்கள் யாவும் மயங்கிவிடும்; பிறகு மிதக்கும்; கொஞ்சதூரம் மிதந்து சென்று குறும்பர் வைத்த கூடையில் விழுந்துவிடும். குறும்பர்கள் செய்யும் தொழில்களிலே ஆண்கள் மட் டும் செய்யும் தொழில்கள், பெண்கள் மட்டும் செய்யும் தொழில்கள் என உண்டு; இருவரும் கலந்து செய்யும் தொழில்களும் உண்டு. تقسی தேன் எடுத்தலும், வேட்டையாடலும், கிழங்கு பயிர் - செய்தலும், கூலி வேலை செய்தலும், விறகு வெட்டலும், காட்டுப் பச்சிலேகளைச் சேர்ப்பதும் ஆடவர் தொழில்கள். வீட்டுத் தோட்டத்தைப் பார்ப்பதும், ஆடு, மாடு, கோழி வளர்ப்பதும் பெண்டிர் தொழில்கள். ஆடவரும் பெண்டிரும் சேர்ந்து செல்வர் கிலங்களிலே கூலி வேலை செய்வர்; பரண்மேலிருந்து தகரப்போணியைத் தட்டிப் பயிர்களேத் தின்னவரும் விலக்குகளே விரட்டுவர். பல பிரிவுகள்: குறும்பர்க்குள்ளே, பால் குறும்பர், காட்டுக் குறும்பர் முள்குறும்பர், பெட்டாக் குறும்பர் என்ற பல பிரிவுகள் உண்டாம். குறும்பர் கரிய நிறமும் குள்ள உருவமும் உடையவர்கள். தலையின் முன் பக்கம் மொட்டையடித்துக் கொண்டு பின் பக் கம் குடுமி வைத்திருப்பர். முன்ளிைல், தலையைச் சிரைக்க ஒடிந்த கண்ணுடித் துண்டுகளேப் பயன்படுத்தினர். இப் பொழுது கத்திகளைப் பயன் படுத்துகின்றனர்; நன்கு ஒடக் கூடியவர்கள். கூரிய பார்வையும் உடையவர்கள். முன் காலத், தில் மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் கட்டியிருந்த வர்கள் இன்று நம் போல உடை உடுத்துகிருர்கள். சிலர் மட்டும் கையில் பித்தளேக் காப்பணிந்து, காதுகுத்திக் கொண்