உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஆனல் கைம்பெண்ணே மணப்பவனுக்கு இத்தகைய விதி ஒன்றும் இல்லை. - தொழில்கள் * குறும்பர்களிற் சிலர் கூலிவேலை செய்வார்கள், சிலர் வயலில் வேலே செய்வார்கள் : சிலர் வேட்டையாடுவார்கள், சிலர் கைத்தொழில் செய்வார்கள். * * o குறும்பர்கள் தேன் எடுப்பது மிகவும் புதுமையாகக் காணப்படுகிறது. இவர்கள் தேன் எடுப்பது பெரும்பாலும் நீலமலையிலேதான். நம்மைப்போல் உடனே சென்று தேன் எடுத்துவிட மாட்டார்கள். தேன் எடுக்கும் முன்னுல் தேன் கூட்டில் இரண்டு குச்சிகளைக் கொண்டு பெருக்கல் குறிகளைப் போல அடையாளம் வைத்துவிடுவார்கள். அவற்றைப் பார்த்த ஏனைய குறும்பர்கள் அந்தத் தேன் கூட்டைச் சிதைத் துத் தேன் எடுக்க முன் வரமாட்டார்கள். இதற்குக் காரணம் அடையாளம் வைத்த குறும்பன் மந்திரங்கொண்டு கொன்று விடுவான் என்ற அச்சமே. இரண்டு மூன்று நாள் சென்ற பின் குறும்பன் தக்க ஆயத்தங்களுடன் தேன் எடுப்பான். தேன் எடுக்கும் முறைகள் பல இருக்கின்றன. குறும்பர்களிலே எருமை நாடாகிய மைசூர்ப் பகுதியில் வாழ்பவன் யானே கூடப் பிடிப்பதுண்டாம். இரவிலே யானேக்கு முன்னல் கின்று கொண்டு குறும்பன் ஒரு தீப்பந் தத்தைத் தன் தலைக்கு மேலே சுற்றி, ஒரு குழியை நோக்கி யானேயை விரட்டுவானம். இதற்கு முன்பே அந்தக் குழியை நன்கு தோண்டி வைத்திருப்பான், இவ்வாறு சுழற்றி ஒட்டு வதிலே கொஞ்சம் தவறினளோ, மறந்து வேறுபக்கம் கவ னத்தைச் செலுத்தியிருந்தாலோ குறும்பன் இவ்வுலகைத் துறக்க வேண்டியதுதான் : யானே அவனே நொறுக்கிவிடும். குறும்பர்கள் மீன் பிடிப்பதும் உண்டு: ஆனல் நம் போல் அல்ல. முதலில் ஒடையில் ஒரு குறிப்பிட்ட இடத் தில் கூடை ஒன்றைப் பதித்து வைத்திருப்பார்கள். இக் கூடையை நாம் இரம்பு என்போம். அக் கூடைக்கு முன் புறம் கொஞ்சம் தொலைவு சென்று ஒரு வகையான நச்சு ) - ఇు