பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 திருமணம் : குறும்பர்களுக்குள்ளே பால்ய மணம் கிடையாது. பருவம் வந்த பின்னரே திருமணம் நடத்தப்படுகிறது. பெண் எடுப்பதிலும், கொடுப்பதிலும் சாதி வேற்றுமை பாராட்டுவ தில்லை. வண்ணன் மகளைச் செருமான் மணக்கலாம் : செரு மான் மகளைக் கூலி மணக்கலாம். கட்டாயத் திருமணம் அவர்களிடையே இல்லை. காதல் திருமணமே நடக்கிறது. காதலால் கட்டுண்ட காதலர்கள் இருவரும் தம் காட்டைவிட் டுச் சென்று விடுவராம். முன் காலத்திலே, பெண்ணின் தந்தைக்கு மாப்பிள்ளை ஒரு புது வேட்டியும், ஒன்றே கால் ரூபாயும் கொடுத்தால் போதும். ஆல்ை, இன்ருே அறுபது ரூபாய் தாம்பூலத்துடன் கொடுக்க வேண்டுமாம். குறும்பர் திருமணத்திலே தாலிகட்டும் வழக்கம் இல்லே. திருமணத்திற்கெனக் காதலர்கள் தனியுடை யுடுத்துவதும் இல்லையாம். நம்போலத் திருமணப் பந்தலோ மண்டபமோ (மணமேடை :) அமைத்தல் அவர்களிடையேயும் உண்டு. திருமண நாளன்று காலையில் பெண்ணே மணமகன் விட் டுக்கு அழைத்து வந்து திருமணத் தாம்பூலம் மாற்றி அங்கு விருந்துண்டால் திருமணம் நடந்துவிட்டது என்பது பொருள். தாலி கட்டாமையால் ஒரு பெண் திருமணமானவனா? ஆகா தவளா ? என்றறிதல் கடினம். ஒரு பெண்ணையே பலர் மணக்கும் வழக்கம் குறும்பரி டம் கிடையாது. திருமணமானதும் மணமக்கள் தனியாக வாழ்க்கை நடத்தத் தொடங்கிவிடுவர். குறும்பர்களிடையே கைம்பெண் மணம் உண்டு. கைம் பெண்மினத்துக்கும் கன்னியின் மணத்துக்கும் வேறுபாடு இல்லை. மணமக்களிடையே தகராறு ஏற்பட்டால் பஞ்சாயத் தார் கூடித் தீர்த்து வைப்பார்கள். மணமுறிவு ஏற்படின் பஞ் சாயத்தார் முடிவுப்படி குழந்தைகள் யாராவது ஒருவரிடத்தில் வளரும். இவ்வாறு மணமுறிவு செய்த பெண்ணே மணப்ப வன் முதல் கணவனுக்கும், அவள் தந்தைக்கும் ஆளுக்கு அறுபது ரூபாய் கொடுத்தே திருமணம் செய்தல்_வேண்டும். no&ka)—6