பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கிருர்கள். அதன் நான்கு பக்கங்களிலும் திறந்த வெளி இருக் கிறது. அதிலே முப்பது முதல் நாற்பது பேர் வரையில் உறங்கலாம். அதைச் சுற்றி இரவும் பகலும் தீ எரிந்து கொண்டிருக்கும். இவர்களில் இருவர் மட்டும் இரவில் காவல் காப்பர். பலவித விலங்குகளின் கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். சில குறும்பர்கள் தங்கள் வீடுகளின் கூரையினை ஒடுகள் கொண்டும் வேய்ந்திருப்பார்கள். வீட்டுப் பொருட்கள் பானைகள், மூங்கில் போணிகள், மண்வெட்டி, கடப் பாரை, அரிவாள், கிழிந்த ஆடைகள், தோணிகள், மூங்கிலால் செய்யப்பட்ட பாய்வகைகள் இவர்கள் பயன்படுத்தும் பொருள்களாம். தொடக்கத்தில் பால் கறக்க மூங்கில் குவளேயும், தேன் ஊற்றி வைக்கவும், தண்ணிர் கொண்டுவரவும், கள் ஊற்றி வைக்கவும் சுரைக்குடுவைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனல் இன்று இரும்பாலான பலவகை ஆயுதங்களேயும் கல் சாமான் களையும் குறும்பர்கள் பயன்படுத்துகின்றனர். பூப்பு நீராட்டு : பெண் பூப்பு எய்தியதும் எட்டு நாட்கள் அப்பெண் தனிக் குடிசை ஒன்றில் வாழ வேண்டும். எட்டாவது நாள் அவள் நீராடுவாள் : தலையில் மலர் சூடிக்கொள்வாள். பூப்பு நீராட்டுச் சடங்கு பெரும்பாலும் நாம் நடத்தும் சடங்கு போன்றதே. பூப்பெய்திய பெண்ணே முதலிலே ஒரு மணே, அல்லது சதுரக்கல் என்பதின் மீது இருத்துவர். அவளுக் கருகில் ஒரு சிறு பையனை மாப்பிள்ளேயாக ஒப்பனை செய்து அமர்த்துவர். பின்னர் கிண்ணத்திலாவது, சிரட்டையிலா வது நல்ல எண்ணெய் ஊற்றி அவர்கட்கு முன் வைப்பர். முதியவரும் உற்ருர்-உறவினரும் இருவர் தலைகளேயும் தொட்டு வாழ்த்துவர். விருந்து நடைபெறும். இத்தகைய சடங்குக்குப் பின்னரே பெண், வீட்டுக்கு அழைத்துச் செல்லப் படுவாள். பின்னர் மாதவிலக்கு ஆகும்போது மூன்றுநாள் அப் பெண் தனிக்குடிசையில் இருக்கவேண்டும்.