பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. குறும்பர்கள் நீல மலவாழ் பெருமக்களிலே குறும்பர்களும் ஒரு பிரிவினர். இவர்கள் தமிழ்மொழி பேசுபவர்கள். ஆனல் அவர்கள் பேசும் தமிழை ஏனைய தமிழர்கள் புரிந்துகொள்ள இயலாது. இவர்கள் பெரும்பான்மையாக வாழுமிடங் கள், நீலமலையிலுள்ள அரக்கோடு, நீர்கண்டிக்குக் கீழே உள்ள கடைஞலா ஆகியவையாம். மற்றும், மைசூர் மலேயாளம், அட்டபாடி, அண்ணுமலே முதலிய இடங்களிலும் குறும்பர்கள் வாழ்கின்றனர். என்ருலும், அவர்களுக்கு அங்கு குறும்பர்கள் என்பதன்று பெயர். பெட்டாக் குறும்பர் என்ற ஒரு வகையினரும் உண்டு. ஆனால், இருவகைக் குறும் பருடைய பழக்க வழக்கங்களும் பிறவும் ஒரு தன்மையனவே. இந்தக் குறும்பர்களில் மலையாளத்தில் இருப்பவர்கள் மலையாளம் பேசுகிருர்கள் : ஆல்ை மலேயாளிகட்கு இது புரி யாது. மைசூரில் உள்ள குறும்பர்கள் பேசும் கன்னடம் கன்னடர்க்கு விளங்காது. அதுபோல அண்ணும8லயிலுள்ள குறும்பர்கள் தமிழ்ப் பேசுகின்றனர். அது, தமிழர்க் குப் புரியாது. இதற்குக் காரணம் இவர்கள் பேசும் மொழி யிலே திரிசொற்கள் மிக அதிகம். குடில்கள் * குறும்பர்கள், மாடி வீடோ, மச்சு வீடோ கட்டி வாழ வில்லை. அவர்கள் வாழுமிடங்கள், குடிசைகளும் பாறைக் குகைகளும், சரிவுகளுமே, குடிசைகட்கு முன்னும் பின்னும் வாழைக் கன்றுகள் வளர்ந்து கிற்கும். குடிசைகள் மூங்கில். கம்புகள் ஆகியன கொண்டும், காட்டுக் கரும்புல் கொண்டும் வேயப்பட்டிருக்கும். குடிசைகள் தனித்தனியாக இடைவெளி மிகவிட்டு அமைக்கப்பட்டிருக்கும். எல்லாக் குடிசைகளுக்கும் மத்தியில், பெரிய பந்தல்போல ஒரு குடிசை கட்டியிருக்