பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 & பூசாரியும் மூன்று குறும்பர்களும் எட்டுநாள், காட்டிலே பெண்டிர் தொடர்பின்றிக் கழிக்க வேண்டும். ஒன்பதாம் நாட் காலையில் கதிரவன் தோன்றியதும், வழிபாட்டுக்குரிய பாறைக்குச் செல்வார்கள். பாறை வெளியில் புலியும் பாம் பும் படுத்திருக்கும். இவர்கள் வருகை கண்டதும், அவை ஒடி விடும். பின்னர் பூசாரியும் பிறரும் பாறைக்குட் புகுந்து அங்கே தண்ணிர் உள்ள கலேயத்தைக் காண்பார்கள். அதன் அருகில் நாலணுவைக் காணிக்கை செலுத்தித் தம் தாய் மொழியில் வழிபாடு செய்து வெளி வருவர். இதற்கு "ஆண்டு வழிபாடு' என்பது பெயர். - * திருவிழா நாட்களிலே ஆடவரும் பெண்டிரும் நடனம் ஆடல் உண்டு. அன்று காட்டெருமை இறைச்சி தின்று, கள்ளேக் குடித்துக் களிப்பார்களாம். 'குழல், பறை முதலிய இசைக்கருவிகளே இவர்கள் பயன்படுத்துகின்றனர். ஊராட்சி : குறும்பர் ஊர்களில் வழக்குகளைத் தீர்ப்பவன் 'முதலி' என்று அழைக்கப்படுகிருன். இவனுக்கு உதவியாக வழக்கு முதலியன தீர்ப்பதில் பூசாரி இருக்கிருன். இந்த 'முதலி', பரம்பரையாக வருகிருன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. தொடக்கத்தில் குற்றம் செய்தோர் நாலணுவை எட்டுநாள். தவணையில் தந்தனர்; இன்ருே, தண்டனை ஒன்றேகால்ரூபாய், இத் தண்டனைப் பணம் எல்லோராலும் தேனிர் அருந்தப் பயன் படுமாம். ஒரு காட்டுக் குறும்பன் மற்ருெரு காட்டுக் குறும்பியை மணக்க வேண்டுமானல் முதலில் இரு காட்டு முதலிகளும் கூடிப் பேசவேண்டுமாம். இழவு : இழவிலே ஆணும் பெண்ணும் சமமே: ஒரு வேற்றுமை யும் இல்லை. காட்டில் கிடைக்கும் வரிச்சுகளையும், மூங்கிலே யும் கொண்டு பாடை கட்டப்படும். கணவன் இறப்பின் மனைவி தன் காது நகையை, தன் வலப்பகுதித் தலைமயிரை எடுத்து அதில் முடிந்து தன் கணவன் நெஞ்சில் வைக்க வேண்டும். மனைவி இறப்பின், கணவன்.தன் காது நகையை