பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 போல் ஆவ் ஆவ் ! ' எனக் கத்துவர். இவர்களைச் சுற்றி லும் கோட்டர் நின்றுகொண்டிருப்பர். கோட்டரின் தனிப் பட்ட அழைப்புப் பெற்ற படகர் ஒரு பக்கம் தீ வளர்த்து உயரமான ஓரிடத்தில் அமர்ந்து ஆட்டத்தைக் களிப்பர். சிறிதுபொழுது சென்றபின் நாட்டியம் முடியும்; வளையம் கலேயும்; வாத்தியக்காரர்கள் தம் கருவிகளைத் தீயில் காட்டிச் குடுடேற்றுவர். சூடாகியதும், மறுபடியும் வாத்திய ஒலி கிளம் பும். ஆனல் புதியபண் ஒலிக்கும். முதலிலே குழல் ஒலிக்கும். அதைத்தொடர்ந்தே பிறவும் ஒலிக்கும். என்ருலும் எல்லாத் துணேக் கருவிகளும் இரண்டாம் முறை ஒலிப்பதில்லை. இக் கூத்தில் ஆடவரோடு பெண்டிரும் அரைவட்டத்தில் நின்று ஆடுவர். பெண்டிர் அரை வட்டத்தைத் தொடர்ந்து ஆடவரும் நின்று முழுவட்டமாக்குவர். பிறகு வட்டம் மெதுவாக நகர்ந்து செல்லும்பொழுது ஒவ்வோர் ஆடவனும் இட மிருந்து வலமும், வலமிருந்து இடமுமாகச் சுற்றிச் சுற்றி வட்டத்துட் சென்று சென்று வெளிவருவான். ஆடவரைவிடப் பெண்டிரே கலையழகு பொருந்த ஆடவல்லவர்; பெண்டிர், தியை வணங்கிய பின்னரே ஆடத்தொடங்குவர். ஆடவர் இந்தக்கூத்தில் சிறப்புடை எதுவும் அணிவதில்லை. இளமை யும் எழிலும் இல்லாப் பெண்டிர் மட்டும் காலிலும் கழுத்திலும் கையிலும் பலவித நகைகளே அணிந்து கொண்டிருப்பர். மூன்ரும் கூத்தில் பெண்டிர் மட்டுமே ஆடுவர். இங்கு ஆடு முன் ஒத்திகை பார்த்தலும் உண்டாம். ஏனேய நாட்களேவிட இந்த விழா நாளின் போது அதிக மகிழ்ச்சியாக அந் நங்கை யர் தோன்றுவர். * * தோதவர் நெய்யும், கோட்டர் தானியமும் " ஆண்டுக்கொருமுறை தோதவர்கள் பலரும் ஒருவனே." தொடர்ந்து தலையில் நெய்யைச் சுமந்து கொண்டு கோட்ட ஊருக்குச் செல்வர். கோட்டர் ஊரின் தோட்டத்தில் " தியுட் புலி' எனப்படும் கோட்டக் குருமார் இருவர் நிற்பர். அக் குருமார் கையில் ' மு ' எனத் தோதவரால் அழைக்கப் படும் கிண்ணம் ஒன்று தானியத்தோடு காணப்படும். ஏனைய கோட்டர்கள் எல்லோரும் ஊருக்கு வெளியே வருவர். ஒா