பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 மேலும் நல்ல விளேச்சலேத் தருவதற்காகவும், இன்னும் பல நன்மைகளே அளிப்பதற்காகவும் கோட்டர்கள் காமத ாயனுக்கு எடுக்கும் விழாவே ஆண்டுவிழாவாகும். இவ் விழா சிறப்பாகவும் பேரளவிலும் கொண்டாடப்படும். இந்த விழா கொண்டாடப்படும் நாள் தைத் திங்களிலே வருகின்ற முழுமதிக்கு அடுத்த திங்கட்கிழமை ஆகும். இந்த விழா பல நாட்கள் தொடர்ந்து நடைபெறும். அத்தனை நாட்களும் கோட்டருக்கு விடுமுறை நாட்களே. இவ்விழாவின் போது கோட்டர்கள் ஆணும் பெண்ணுமாகக் கலந்து ஆடிப் பாடிக் கூத்தாடி இன்பத்தில் திளேப்பர். இவ்விழாவிலே படகரும், மணியகாரரும் வந்து சேரவேண்டும். அவர் வரா விட்டால், அச் செய்கை தங்களின் சொந்த மதிப்புக்கு அவர்கள் விட்ட அறைகூவல் எனக் கோட்டர் எண்ணுவர். பெருஞ் சினங்கொள்ளுவர். அச்சினத்தால், படகர்க்குக் கோட்டர்கள், ஏர் முதலிய கருவிகளும், மண்பாண்டங் களும் தரமாட்டார்கள். இ ந் த வி ழா - பெருவிழா பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். கோட்டர் கூத்தாட்டம்: இந்தப் பெருவிழாவைப்பற்றி திரு. எமில் கமிடர் என்பவர் விளக்கமாகக் கூறியுள்ளார். அத்தனை விழா நாட்களிலும் பெருவிருந்து நடக்கும். மாலேயில் கடவுள்வழிபாடு நிகழும். இரவிலே கோயிலுக்கு முன்னர் மூட்டப்பட்டுள்ள தி முன்னர் கூத்து நிகழும். கடைசி நாளிரவுமட்டும் ஆடவரைப்போல, பெண்டிரும் கூத்தாடுவர். இருள் கவிந்த பின்னர் கோயிலின் முன்புறத்தே தி வளர்க்கப்படும். அத் தீவெளிச்சத்தில் பலவிதமான வாத் தியங்கள் முழங்கும். தியைச்சுற்றி முதியவரும் இளேயவரும் கலந்து அரைவட்டமாக நிற்பர். பின்கையைத் தூக்கிப் புது மையானதோர் ஆட்டம் ஆடுவர். பிறகு அக் கூத்துக் கூட் ம் மெதுவாக முன்னுேக்கி நகரும். அப்போது ஆவ் ஆவ் ! என ஒருவன் கத்துவான். முடிவில் எல்லோரும் ஒன்று