பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அக்குழியில் சில கேப்பை விதைகளைத் தூவுவான். இதற் கிடையில் கோட்டர் அனைவரும் கோயிலுக்குச் சென்று கோயிலேக் கழுவிவிடுவர். பிறகு பூசாரியும் பையனும் வந்து வெற்றிலே, தேங்காய் முதலிய பூசைப் பொருள்களே வைத்து வழிபடுவர். சிலபோது தெற்காரன் மேல் தெய்வம் வரப்போவதை அறிவிக்குமாம். வழிபாடு முடிந்த பின்னர் எல்லோரும் பூசாரியோடு அவன் வீடு சென்று அவன் தரும் சிறிது பாலேயும் உணவையும் பெறுவர். மூன்று திங்கள் கழித்து ஒரு நன்னாளில் இதே போன்று மீண்டும் ஒருமுறை சடங்கு கடத்தி அறுவடை செய்தல் வழக்கம், கோட்டர் தெய்வங்கள்: கோட்டர்கள் பல தெய்வ வணக்கம் உடையவர்கள். மலையாளத்தை ஒட்டிய குடலூர்ப் பகுதிகளில் வாழ்கின்ற கோட்டர்கள் தமது பகுதியிலுள்ள காமதராயன், மாகாளி, விட்டகரச்சாமி, அடிரால், உடிரால் ஆகிய தெய்வங்களே வழிபடுகின்றனர். இவற்ருேடு, மலேயாள நாட்டுத் திருவோண விழாவிலும் கோட்டர் கலந்துகொள்ளுகின்றனர். காளி என்பவள் வாந்தி பேதியைத் தருவதாக இம்மக்கள் நம்பு வதால் அவளேயும் உலகத்தாய் எனக்கூறி வழிபடுகின் றனர். வைசூரியைத் தருவதாகக் கருதும் மாரியம்மனேயும் இவர்கள் வணங்குகின்றனர். இவ்விரு தெய்வங்கட்கும், பலி கொடுத்து விழா நடத்தல் கோட்டர் வழக்கமாம். கோட்டகிரிக்குச் சற்றுத் தொலைவில் ஒரு மாகாளி கோயில் உள்ளது. அங்கு ஒரு குத்துக்கல் உண்டு. இங்கே ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். விழாவில் பூசாரி தெய்வமுற்று வெறியாடல் உண்டு. அப்போது, செம்மறி யாடு, கோழி முதலியன பலியிடப்படும். இத்தெய்வங் களேப்பற்றிப் பல கதைகள் உண்டு. ஆனால், கல்வி கற்ற இக்காலக் கோட்டர்கள் இந்தக் கதைகளையும் தெய்வ வழி பாடுகளேயும் இழிவாகக் கருதுகின்றனர். ஆண்டுவிழா : நாம் கொண்டாடும் பொங்கல் விழாப் போன்றதே இந்த விழா. தமக்கு நல்ல அறுவடை தந்தமைக்காகவும்