பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 ஒரு வேறுபாடு. தெற்காரன் தீக்கடையான், கடைந்துண் டான நெருப்பை முந்தக்கண்ணுனிடம் வாங்கிக்கொள்வான். இந்தக் குருமார் தம் வேலைகளைத் தவிரப் பிறர் வேலைகளைச் செய்வது இல்லே. இக்குருமார் தோதவரின் இழவு வீட்டுக் கும், மாத விலக்கு ஆன வீட்டுக்கும் போதல் அறவே கூடாது. புதிய குருமார்: - .." முந்தக்கண்ணுன் பதவியிலே காலி ஏற்பட்டால் கோட் டர்கள் புதிய குருமாரைத் தெரிந்தெடுக்கத் தெற்காரன் துணேயை நாடிச் செல்வர். தெற்காரன் மீது உடனே தெய் வம் வரும். தெய்வமுற்ற அவன் சொல்லும் பெயரினனே குருமார் பதவியைப் பெறுவான். அங்ங்ணம் தெரிந்தெடுக் கப்பட்ட குருமாருக்கு மூன்று திங்கள் கோட்டர் வீடுகளிலே விருந்துகள் நடத்தப்படும். இந்த விருந்துக் காலத்திலே, அக்குருமார் தன் மனைவியோடோ வேறு பெண்ணுேடோ நேரடியாகப் பேசுதல் கூடாது; அதற்கென அமர்த்தப்பட்ட ஒரு பையன் மூலமே பேசுதல் வேண்டும். இந்த மூன்று திங்களும் குருமார் வெறுங் தரையில்தான் உறங்குதல் வேண்டும். விழாக் காலங்களிலும் தெற்காரனும் முந்தக் கண்ணனும் தம் மனைவியரோடு பேசுதல் இல்லே. இதற்குக் காரணம் தீட்டு ஏற்பட்டுவிடும் என்ற அச்சமே. தம் உணவைக்கூட இவர்களே சமைத்துக்கொள்வர். விதைப்புச் சடங்கு, தை அல்லது மாசி மாதத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் நடத்தப்படும். விழா நடைபெறும் நாட்களில் பூசாரி புலால் உண்ணுன்: மனைவியோடு நேரடியாகப் பேசான்; சடங்குக்கு முன்னுல் உள்ள ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கிராலில் பசுக்களே வரிசையாக நிறுத்திப் பால் கறப்பான். கறந்த அப்பால் நல்ல நிமித்தம் ஏற்பட்டால் புளிக்காதாம். தீநிமித்தம் ஏற் பட்டால்தான் புளிக்குமாம். அவ்வாறு பால் புளித்துவிட் டால், பூசாரி திட்டுப்பட்டுவிட்டான் என்று கருதப்ப்டும். பின் சடங்கன்று பூசாரி ஒடையிலே குளித்துவிட்டு, ஒரு பையனுடன் காட்டுக்காவது வயலுக்காவது செல்வான். பின்னர் கடவுளே வழிபடுவான்; ஒரு குழி தோண்டுவான்: