பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HH 96 கொத்தியுடன் வயலுக்குச் சென்று வேலை செய்வர்: மாலை யில் வீடு திரும்புவர். இப்பெண்டிர் கூடையும் முடைவர்: பாஜன சட்டிகளும் வனவர். ஒவ்வொரு வீட்டின் முன்னரும் பாஜன வ&னயப் பயன்படும் சக்கரங்கள் இருக்கும். தோதவரும் படகரும் தமக்கு வேண்டிய மண்பாண்டங்களேக் கோட்டரிடமிருந்தே பெறுகின்றனர். தோதவரின் பால் பண்ணைக்கு வேண்டிய பால் தாழிகளைச் செய்வோர் கோட்டரே. குருமார் : கோட்டரின் குருமார் முந்தக்கண்ணுரும் (முண்டக் கண்ணுரும்) தெற்காரரும் ஆவர். இந்த இருவருள்ளும் முந்தக்கண்ணுர் உயர்ந்தவராகக் கருதப்படுகின்றனர். ஒர் ஊருக்கு இரு முந்தக்கண்ணுரே பூசாரிகளாக இருக்கலா மாம். அவரும் வெவ்வேறு தெருக்களில்தான் குடியிருக்க வேண்டுமாம். தெற்காரர் ள்த்தனை பேர் வேண்டுமானுலும் இருக்கலாம். குருமார்கள் மனைவி இழந்தவராக இரார். மனைவியை ஒரு குரு இழந்துவிட்டால் அத்தோடு அவனது குரு பதவியும் போய்விடுமாம். மற்ருேர் புதுமையான வழக் கம் ஒன்று இந்தக் குருமாரிடம் காணப்படுகிறது. அதாவது, இக் குருமார் எருமையின் இறைச்சியை உண்ணலாமாம். எருமைப்பாலேக் குடிக்கக் கூடாதாம்! பசுவின் பாலேக் குடிக் கலாமாம், பசுவின் இறைச்சியை உண்ணலாகாதாம் ! கோட்டர்கள் பசுவிலே பால் கறக்க அனுமதிக்கப் படுதல் இல்லை. உள்ளூர்ப் பூசாரிக்கே பால் கறக்கும் உரிமை உண்டு. அவன் தரும் பாலைத்தான் கோட்டன் குடிக்க வேண்டும். ஆனல். கோட்டன் பிற ஊர்களிலிருக்கையில் வேண்டிய அளவு பாலேக் குடிக்கலாம். முந்தக்கண்ணுன் பசுவில் பால் கறக்கும் கடமையோடு சிறு தெய்வ வழிபாடும் நடத்தி வைப்பான்; விதைப்பு அறுவடை முதலியவற்றின் சடங்குகளையும் செய்வான். இப்பூசாரி, கடை கோலால் உண்டான தீயை உடைந்த பானையில் காத்து வைத்துப் பயன்படுத்துவான். இந்தத் தீயைத் தவிர வேறு தீக்குச்சி களே இவனே, தெற்காரனே பயன்படுத்துவதில்லை. ஆல்ை,