பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 வாழ்வர். இவர்களுக்குத் தெற்காரன் தேவாடி என்ற வேறு பெயர்களும் உண்டு. மற்ற வேறு இரண்டு தெருக்களுள் 'முந்தக்கண்ணுர் என்னும் பூசாரிகள் வாழ்வர். ஒரு தெருவி லுள்ள மக்கள் தம்மை ஒரே குடும்பத்தினராக எண்ணித் தம்முள் பெண் எடுப்பதும் கொடுப்பதும் வைத்துக்கொள்வ தில்லை; தெருவிட்டுத் தெரு மண உறவு கொள்வர். இக் கட்டுப்பாடுகளே மீறித் திருமணம் செய்தாலும் அவர்கள் உள்ள அமைதி அடையார். கீழைத் தெருமக்கள் நடுத் தெரு, மேலைத்தெரு ஆகிய இரு தெரு மக்களோடும், நடுத் தெரு மக்கள் மேலைத்தெரு மக்களோடும், திருமண உறவு கொள்வர். முதல் மனைவியைக் கீழைத்தெருவில் கொண் டால் இரண்டாம் மனைவியை மேலைத்தெருவில் கொள்வர். ஆனல் இந்தக் கட்டுப்பாடு காலப்போக்கில் நிலை தளரலா யிற்று. சோலூரில் நான்கு தெருக்கள் உள்ளன. அவை பின் வருமாறு :-(1) அம்கிரி-நெருங்கியுள்ள தெரு (2) கிக் கிரீ-கீழைத்தெரு (3) கொரக்கீரி-மற்ருெரு தெரு (4) அக்கீரி-அந்தத் தெரு. நான்கு தெரு மக்களும் இருபிரிவின ராகப் பிரிந்து, தத்தம் பிரிவினுள் மண உறவு விலக்கிப் பிற பிரிவொடுமண உறவு கொள்வர். அஃதாவது, அம்கிரியினரும், கீக்கீரியினரும் ஒரு பிரிவினர் : கொரக்கீரியினரும், அக்கீரி யினரும் ஒரு பிரிவினர். இந்த இரு பிரிவினருமே மணஞ் செய்துகொள்வர். - தவருன வழியிலே பெண் உறவு கொள்ளல் கோட்டரால் வரவேற்கப்படுகிறது. ஒவ்வோர் இளைஞனும் ஒரு குறிப் பிட்ட வயதில் பெண் நோய் வாங்கா விடில் அவனைப் பிற கோட்டர் எல்லாம் ஏளனம் பண்ணுவராம். பிற கன்னியரைக் காணல், அளவளாவுதல், கூடல் கோட்டர்க்குள்ளே அடிக்கடி நிகழும். இதனைக் கோட்டர் தவருகக் கருதுவதில்லை. கோட்டர்கள் பார்ப்பதற்குக் கோரமாக இருப்பர். அவர் உணவு உண்பதில் நாகரிகம் அறியாதவர். பிற விலங்குகள் செத்துப் புழுத்து அழுகிக் குளு குளு என்று இருந்தாலும் சரி, கோட்டர்கள் அவற்றை உண்பர். ஒரே பல் குச்சியை நாள் கணக்காகப் பயன்படுத்துவர். கோட்டர் ஊர்களில்