பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கோட்டகிரி, கீழ்க்கோட்டகிரி, தோடநாடு, சோலூர், கெத்தி, குண்டா முதலிய ஆறு ஊர்களிலும் நீலமலையின் வடமேற்கு அடிவாரத்தில் உள்ள குடலூர் என்ற ஊரிலும் கோட்டர்கள் வாழ்கின்றனர். கோட்டர் வாழுகின்ற குடிசைகள், மண், மரம், கல் என்பன கொண்டு அமைக்கப்பட்டவை. கூரை ஒலை, ஒடு என்பனவற்ருல் வேயப்பட்டிருக்கும். குடிசையிலே ப்டுக்க ஒரு பகுதி, பிற பொருள்கட்கும், புழக்கத்துக்கும் மற்ருெரு பகுதி என இரு பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு குடிசையின் முன்பும் இருமருங்கும் திண்ணேகள் இருக்கும். அவற்றி லமர்ந்துகொண்டு கோட்டர்கள் சுருட்டுப் பிடிப்பர். குடிமயக்கத்தில் அவற்றிலே கோட்டர்கள் கிடத்தலும் உண்டு. குடிசைக் கதவுகளிற் சில, சிற்ப வேலைப்பாடு உடையவை. தாமரை, மீன், பூ முதலியன வெட்டப்பட்ட கற்றுண்கள் கோட்டகிரியில் உள்ளன. இவ்வேலைப்பாடுகள் மலையின் கீழிருந்து வந்த பிற தச்சரால் செய்யப்பட்டிருக்கும் என்பது அறிஞர் திரு. பிரீகர் கருத்தாம். சோலூர் எனப் படும் குர்குழி என்ற ஊர்தான் கோட்டரின் பழைய ஊர் என்றும், இவ்வூர்க்கோட்டர்கள் தோதவர்க்குப் பிறந்தவர் என்பதும் படகரின் கருத்தாம். தோதவரது பால் பண்ணே களில் உள்ள சிறு தெய்வங்கள் போல குர்குழியிலும் உள்ளன. கோட்டரது வேறு எந்த ஊரிலும் கற்சிலேகள் இல்லை. கோட்டர் மொழி தமிழும் கன்னடமும் கலந்த ஒன்ரும். படகரும் தோதவரும் தமிழ்ச்சொற்க ளே வேறுபடுத்தி உச்சரிக்க, கோட்டரோ நம்போலவே உச்சரிக்கின்றனர். கோட்டர் பழக்க வழக்கங்கள் : கோட்டர் வாழும் ஒவ்வோர் ஊரிலும் பெரும்பாலும் மூன்று மூன்று தெருக்கள் இருக்கும். கோட்டர் மொழியில் கீரி என்ருல் தெரு என்று பொருள். கோட்டர் தெருக்கள் தென் வடலாக அடுத்தடுத்து இருக்கும் போலும். அதல்ை தான் அவர்கள் அந்த மூன்று தெருக்கட்கும் மேல் கீரி, கடுக் கீரி, கீழ் கீரி என்று அழைக்கின்றனர் என எண்ணலாம். இந்த மூன்று தெருக்களிலே ஒன்றில் 'சாமியாடி என்பவர்