பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கோட்டர்கள் தோற்றம் : நீலமலைக்கு வரும் முன்னர் கோட்டரும், தோதவரும் ஓரிடத்தில் வாழ்ந்தனராம். இவ்வாறு, ஒன்ருக வாழ்ந்த இவர்கள் நீலமலைக்கு வரத் தொடங்கியதும், பிரிந்து விட்டன ராம். கோட்டர் பேசும் மொழியும், தோதவர் பேசும் மொழி யும் மிக நெருங்கிய தொடர்பு உடையவை என்று சொல்ல லாம். செவிவழிச் செய்தி ஒன்று இவர்கள் வாழ்ந்த முதலி டம், எருமை நாடாகிய மைசூரைச் சேர்ந்த கொல்லிமலைப் பகுதி என்கிறது. எதனையும் வடமொழிச் சார்புப்படுத்தி மொழியும் சிலர், கோட்டர் என்பதனை கோ கத்யா " எனப் பிரித்து மாற்றிப் பசுவைக்கொல்வோர் எனப்பொருள் கூறிப் பொய்மையால் பூரிப்பர். கோட்டர் திராவிட இனத்தவர். எனவே, கோட்டர் என்ற சொல் திராவிட மொழிகளைச் சேர்ந்த சொல்லாதல் வேண்டும். கோட்டர் என்பது கோடுஅர் எனப் பிரிபடும். கோடு என்ருல் மலை என்பது பொருள். மலைவாழ்வோர் கோட்டர் என்று கூறுவோரும் உள்ளனர். தோதவரும் கோட்டரும் ஒன்ருக வாழும்பொழுது. எருமைகளே மேய்த்துக்கொண்டிருந்தனராம். அப்போது ஒர் எருமை இறந்ததாம், அந்த எருமையின் புலாலேக் கோட்டர் தின்றனராம். அதற்குச் சினங்கொண்ட தோதவர் ' மாட் டுக் கறி உண்போர் ' எனக் கோட்டரை விரட்டினராம், இப்படியும் ஒரு கதை வழங்குகிறது. கோட்டருக்கும் தோத வருக்கும் இரத்தக் கலப்பு உண்டென்பது அறிஞர் சிலர் கருத்து. s #. கோட்டர் ஊர்களும் குடிசைகளும் : கோட்டர் வாழுகின்ற ஊர்கள் கோட்டகிரி அல்லது கோகால் என்று அழைக்கப்படுகிறது. நீலமலையில் உள்ள