இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கணபதி தோத்திரம்
| l. | குள்ளக் குள்ளனை |
| குண்டு வயிறனை | |
| வெள்ளிக் கொம்பனை | |
| விநாயகனைத் தொழு. | |
| 2. | குள்ளக் குள்ளக் கணபதியாம் |
| குண்டு வயிற்றுக் கணபதியாம் | |
| வெள்ளிக் கொம்புக் கணபதியாம் | |
| விநாயகர் பாதம் போற்றிடுவோம். | |
| 3. | குள்ளக் குள்ளனை |
| குண்டு வயிறனை | |
| அஞ்சு கரத்தனை | |
| ஆனை முகத்தனை | |
| நெஞ்சில் நினைக்க | |
| நலமுண்டாகுமே. |