உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் அடிக்கடி இலக்கிய அரங்கிற்குச் செல்வதை என்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கோடையில் ளைப்பாற்றிக்கொள்ளும் குளிர் தருவாக - தரு நிழலாக இருப்பது எனக்கு இலக்கியம்தான் என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அந்த இலக்கியத்தை இந்த மாமன்றத்திலே இன்றைக்கு உங்களோடு பரிமாறிக் கொள்வதற்காக உங்கள் முன்னால் நான் நின்றுகொண்டிருக்கிறேன். என்னுடைய ஆருயிர் நண்பன் மறைந்த கண்ணதாசன் ஒரு முறை என்னைப்பற்றிக் கூறும்போது - "கருணாநிதி, உன்னுடைய செங்கோலை ஒரு வேளை யாராவது பறித்தாலும் பறிக்கலாம், ஆனால் உன் கையில் இருக்கின்ற எழுதுகோலை எவராலும் பறிக்க முடியாது" - என்றார். அந்த நம்பிக்கை எனக்கு என்றைக்கும் உண்டு. அந்த நம்பிக்கையை எனக்குத் தருவதற்காக உங்களைப் போன்ற உடன்பிறப்புக்கள் இலட்சோப இலட்சம் பேர் இந்த உலகத்தின் பல பகுதிகளிலே உண்டு. அந்தத் துணிவோடுதான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். - தமிழகத்திற்கும் - மலேசிய நாட்டிற்கும் சிங்கப்பூர் நாட்டிற்கும் இன்று நேற்றல்ல - நீண்ட நெடுங்காலமாக நம்முடைய சாதனைச் செம்மல் சாமிவேலு அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல தொடர்பும் உறவும் சொந்த பந்தமும் உண்டு. அந்த அடிப்படையில்தான் உங்களையெல்லாம் சந்திக்க இரண்டாவது முறையாக நான் வந்திருக்கிறேன். இங்கே நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது நான் வந்தேன். அப்போது விமானநிலையம் கோலாலம்பூர் நகருக்கு அருகே இருந்தது. அதனால் பல்லாயிரக்கணக்கில் நீங்கள் விமான நிலையத்திற்கு திரண்டு வந்து என்னைக் கசக்கிப் பிழிந்து இந்த 18