உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படி எழுதப்படாத காரணத்தால் நமக்கென்று வரலாறு கிடையாது. எழுதப்படாத காரணத்தால் வரலாறே இல்லை என்று ஆகிவிடுமா என்றால் கிடையாது. வரலாறு உண்டு, ஆனால் எழுதப்படவில்லை. நமக்குக் கிடைத்த இலக்கியங்கள்தான் வரலாற்றுச் சான்றுகளாக இருக்கின்றன. நான் நம்முடைய பழைய வரலாறுகள், சேர, சோழ, பாண்டியர்களுடைய வரலாறுகளைப்பற்றி நினைப்பதற்கு முன்பு அண்மையில் 200 ஆண்டு காலத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை தமிழகத்திற்கும் மலேசியாவிற்கும் ஏற்பட்ட தொடர்பு எத்தகையது என்பதை விளக்குவதற்காகக் விரும்புகிறேன். கூற தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையரை எதிர்த்து முதலிலே களம்சென்று கடகம் ஏந்தி இறுதியாக சுதந்திரத்திற்காக தன்னையே பலி கொடுத்துக் கொண்ட பூலித்தேவன், தொடர்ந்து வீர பாண்டிய கட்டபொம்மன், தொடர்ந்து மருது பாண்டியர்கள் ஆகியோரைத் தொடர்ந்து 1802-ஆம் ஆண்டு மருதுபாண்டியர்களின் வழித்தோன்றல்கள், அவர்களுடைய உறவினர்களை, அந்த புரட்சிக்காரர்களை பேராளிகளை எஞ்சிய விடுதலைப் போர்த் தளபதிகளை தூத்துக்குடியிலிருந்து கப்பலில் ஏற்றி ஜேம்ஸ் வால்ஷ் என்பவர் லெப்டினென்ட் ராக் ஹெட் என்பவரின் தலைமையில் மொத்தம் 73 பேரை 76 நாட்கள் பயணம் செய்ய வைத்து கடைசியாகக் கொண்டு வந்து விட்ட இடம் பினாங்கு. மலேசியப் பகுதியிலே உள்ள பினாங்கில்தான் அவர்கள் கொண்டுவந்து விடப்பட்டார்கள். இது 'சவுத் "சவுத் இண்டியன் ரிபல்லியன் தலைப்புள்ள புத்தகத்தில் காணப்படுகின்ற உண்மை. என்ற 21