உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூத்துக்குடியிலிருந்து 73 பேர் 76 நாட்கள் கப்பலில் கட்டப்படவில்லை. பயணம் செய்தார்கள். அவர்களுடைய கைகளிலே கால்களிலே விலங்கு மாட்டப்பட்டிருந்தது. நான்கைந்து பேர்களின் கைகள்தான் காரணம் அவர்கள் கப்பலில் சமையல் வேலைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் விலங்கிடப்பட்டு பினாங்கில் 76 நாள் பயணத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டார்கள். நான் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அந்த நூலிலே உள்ள 73 பேரின் பெயர்களையும் உங்கள் முன்னால் படிக்க விரும்புகிறேன். அதுதான் நாம் அவர்களுக்கு ஆற்றுகின்ற கைம்மாறு. அவர்களுக்காக நாம் செய்கின்ற வீர வணக்கம். 73 பெயர்களை படிக்கும்போது கொஞ்சம் உங்களிடையே அயர்வு ஏற்படலாம், அயர்வு ஏற்படக்கூடாது. அயர்வில்லாமல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட மானமறவர்களின் பெயர்களை படிக்கின்ற நேரத்தில் அயர்வுக்கு பதிலாக உணர்வு ஏற்படவேண்டும். எனவே படிக்கிறேன். 1. வேங்கம் பெரிய உடையத் தேவர், சிவகங்கை, 2. துரைசாமி (தந்தை பெயர் மருதுபாண்டியன்), 3. வேரப்பூர் பொம்ம நாயக், 4. ஜெகநாத அய்யர், ராமநாதபுரம், 6. சடமாயன், 7. கோனியாமி 5. ஆண்டியப்ப தேவன், தேவன், 8. தளவாய் குமாரசாமி நாயக், பாஞ்சாலங்குறிச்சி, 9. மேலூர் குமாரத் தேவர், 10. பாண்டியன்புத்தூர் பாண்டியன், 11. முத்து வீரா, அரங்குளம்,12. சாமி, மணக்காடு, 13. ராமசுவாமி,14. இருளப்ப தேவர், நாங்குனேரி, 15. பாண்டியன் நாயக், கம்பாடி, 16. மாடத் தேவன், 17. மாலயில்மாடன், 18. சின்ன பிச்சத் தேவன், 19. வீர பாண்டியத் தேவன், 20. வீரப் பெருமாள் தேவன், 21. கருப்பத் தேவன், 22. சுலோமோனியா, 23. நந்தசாமி, 24. பெருமாள், 22