பக்கம்:மாணவர்களுக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மாணவர்களுக்கு


இது தமிழ்மொழிக்கு உரிய ஒரு தனிப்பெருஞ் சிறப்பு. இதை எண்ணி மாணவர்களாகிய நீங்கள் பெருமையடைய வேண்டும். இன்னும் ஒன்று. இந்த எண்பத்து ஆறாயிரத்து இருநூறு சொற்களும், 'பொருள் அமைதி உடையன என்று, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தொல்காப்பியர் கூறியுள்ளார் . எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பியரது நூற்பா. இந்த எண்பத்து ஆறாயிரத்து இருநூறு சொற்களில் எந்தச் சொல்லும் பொருளற்ற தல்ல என்பது அவரது முடிவு.

இசை என்பது இரண்டெழுத்து உள்ள ஒரு செர்ல். அதன் பொருள் பாடகன், அவனது தொண்டை, பாட்டு, பாடும் தன்மை, பக்க இயம். பண், சுதி, தாளம், கேட்போர் உள்ளம் அனைத்தும் ஒன்றாக இசைய வேண்டும். அப்போது தான் அதற்கு இசை என்று பொருள். இல்லாவிடில் "இரைச்சல்' என்றே பொருள்படும். -

மாணாக்கன் என்ற சொல்லும், நிறைந்த பொருளமைதி உடைய ஒரு சொல். மாண்புடையவனாக ஆக்குதல் என்றே பொருள் தரும். இதைவிட பெண் பிள்ளைகளை மாணாக்கியர் என்பது இப்பொருளையே நன்கு விளக்குவதாக இருக்கும். இப்பெருமை இப்பருவத்தில்தான் இருக்கும். இதற்கு முன்புமிராது, பள்ளிப் படிப்பை முடித்த பின்பும் வாராது. மாண்புடையவர்களாக ஆக்குகின்ற பருவமே மாணாக்கர், மாணாக்கியர் என்ற பருவம். ஆகவே இப் பருவகாலத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/15&oldid=1265172" இலிருந்து மீள்விக்கப்பட்டது