பக்கம்:மாணவர்களுக்கு.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

55

இன்று திரைப்படங்களில் பல நல்லவைகளாக இல்லை. அவை ஒழுக்கக் கேடுகளை வளர்க்கின்றன. மனைவியையோ, மகளையோ கூட்டிக் கொண்டு போய்ப் பார்க்கிற மாதிரி இல்லை. யார், யாரையோ கூட்டிக் கொண்டு போய்ப் பார்க்கிறமாதிரி இருக்கின்றன. நம் நாட்டிலுள்ள சில பத்திரிகைகள் முன்பு பொழுது போக்குக் கதைகளை எழுதின. பின்னர் நகைச்சுவைக் கதைகளை எழுதின, பின்னர் காதல் கதைகளை எழுதின. பின்னர் காமக் கதைகளை எழுதின. இப்போது ஆபாசக் கதைகளையே எழுதிக் கொண்டிருக்கின்றன.

இவற்றை இப்படியே வளரவிடலாமா? தடுப்பது யார்? எப்படித் தடுப்பது? சிந்திக்க வேண்டும். இப்படியே போனால் நாடு என்னாகும்?

இக்காலத்தில் இந்த நிலையில் தான் மாணவர்களாகிய நீங்கள் வாழ்ந்து தீர வேண்டி இருக்கிறது. வாழ்வில் வெற்றி பெற உங்களுக்கு இரு கருவிகள் வேண்டும். ஒன்று விழிப்பும். மற்றொன்று பொறுப்பும் ஆகும்.

கா. ஆங்கிலப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்பது மட்டுமல்ல. ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள எல். கே. ஜி., யு கே. ஜி. என்ற பள்ளிகள் தமிழகத்தின் சிற்றுார்களிலெல்லாம் நச்சுப்பூச்சிகள் போல வெகு விரைவாகப் பரவி வருகின்றன.

இப்பள்ளிகளில் பிஞ்சு உள்ளம் படைத்த தமிழ்க் குழந்தைகளின் உடையை மாற்றி உணவை மாற்றி,