பக்கம்:மாணவர்களுக்கு.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மாணவர்களுக்கு

உறக்கத்தை மாற்றி, மொழியை மாற்றி, பழக்க வழக்கங்களை மாற்றி, தமிழ்ப் பண்பாட்டையே மாற்றி வருகின்றனர்.

இக்குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணும்போது நம் நெஞ்சம் புண்ணாகி விடுகிறது.

சிற்றுாரில் உள்ள விவசாயி ஒருவன் பம்பாய்க்குச் சென்று கடற்கரையைப் பார்த்தான். அங்கு ஐந்து வயதுள்ள சிறுவன் ஒருவன் கால்சட்டை, காலணி, மேல் சட்டை, தொப்பி முதலியவைகளை அணிந்து கொண்டு, கடற்கரை அலையில் இறங்கி. அலையின் பின்னே ஒடுவதும், அது வரும்போது திரும்புவதுமாக விளையாடிக்கொண்டிருந்தான். அக் குழந்தையின் எதிரில் ஒரு ஆள் உட்கார்ந்து இதை வேடித்கை பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட விவசாயி பயந்து போய், அந்த ஆளிடம் பையனைக் கூப்பிடுங்கள் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று பதறிப் போய்க் கூறினான். அதற்கு அந்த ஆள் அது பையன் அல்ல. பெண் என்று கூறியதும், விவசாயி அது பெண்ணா? என்று வியந்து கேட்டான். ஆம் என்று பதில் வந்ததும், நீங்கள் தான் அப்பெண்ணின் அப்பாவா? என்று கேட்டான். அதற்கு வந்த விடை அப்பா அல்ல, அம்மா என்பதே. விவசாயி வியப்பில் மூழ்கி விட்டான். ஆணா? பெண்ணா? என்று இப்போதே அறிய முடியவில்லை என்றால், எல். கே. ஜி., யு. கே. ஜி. யில் படிக்கும் பெண் குழந்தைகள் இன்னும் இருபது ஆண்டுகள் கழித்து எவ்வாறு காட்சியளிக்கும். தமிழும், தமிழகமும என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.