பக்கம்:மாணவர்களுக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மாணவர்களுக்கு


திருமணம் செய்து இல்வாழ்வில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்த வேண்டும் என்று விரும்புகிற பெண்கள் இடது புறப்பாதையில் நடந்தாக வேண்டும். காரணம், இல்லறத்தை நடத்தும் குடும்பப் பெண்களுக்கு உயர் நிலைப் பள்ளிப்படிப்பே போதுமானது. வேண்டுமானால் மேல் நிலைப் பள்ளி வரை படித்து படிப்பை நிறுத்திக் கொள்ளலாம். இந்த முடிவு என் முடிவு மட்டுமல்ல; பல அறிஞர்களின் முடிவும், பல பெற்றோர்களின் முடிவும் ஆகும்.

நம்முடைய சமூகம் சரியில்லை. கல்லூரியில் படித்த பெண்கள் பலருக்குத் திருமணம் ஆவதில்லை. சில திருமணங்களே நடைபெறுகின்றன. அந்தத் திருமணங்களிலும் வரதட்சணைக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன. இதனால் சில செல்வந்தர் வீட்டுத் திருமணங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. ஏழைகள் வீட்டுத் திருமணங்களும், நடுத்தர வீட்டுத் திருமணங்களும் நடக்காமல் போய் விடுகின்றன.

கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பெண்களை, உயர்நிலைப் பள்ளியில் படித்த ஆண்களுக்கோ விவசாயிகளுக்கோ, வியாபாரிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ, திருமணம் செய்து கொடுக்க முடிவதில்லை.

நம் சமூகத்தில் கல்லூரியில் படித்த பெண்கள் அதிகமாகவும், கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற ஆண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதால், அவர்கள் வரதட்சணைத் தொகையை அதிகமாகக் கேட்கிறார்கள்.

ஒரு பெண்ணைக் கல்லூரியிற் படிக்க வைத்து, அறிவாளியாக்கித் தனக்கு கொடுத்கிற மாமனாருக்கு. கல்லூரியில் படித்த ஒரு மாணவன் நன்றி செலுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/65&oldid=1267731" இலிருந்து மீள்விக்கப்பட்டது