பக்கம்:மாணவர்களுக்கு.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

9

ஆகும்" (ப. 35). சொற்பொழிவுக்கே இலக்கணமாக அமையும் பகுதி இதுவாகும். மேடைப் பேச்சாளர் ஒல்வொரு வரும் கடைப்பிடிக்க வேண்டிய முறைஇது.

அவ்வாறே எழுத்துக்கும் இலக்கணம் கூறியுள்ளார் கி.ஆ.பெ. "உயர்ந்த உள்ளத்தைப் பெற்று, நிறைந்த கருத்துக்களைத் தேடி, சிறந்த சொற்களைக் கொண்டு, குறைந்த எழுத்துக்களால் எழுதப்படுவதே எழுத்து என்றாகும். அவ்வாறு எழுதுபவனே எழுத்தாளன்” (ப. 25.) எழுத்தாளனுக்குக் கூடாத பண்புகளைப் பக்கம் 26-இல் பட்டியலிட்டுத் தருகிறார். வால்டேரின் கருத்தைக் கொண்டு எழுத்தின் வலிமையை, 'வாள் முனையைவிடப் பேனா முனையே அதிக வலிமையுடையது' என்று உணர்த்தியுள்ளார் (ப. 29).

கல்வி, ஒழுக்கம் முதலியவற்றின் இன்றியமையாமையை விளக்கி, மாணவரை நெறிப்படுத்தும் கி. ஆ. பெ. அவர்கள் மாணாக்கர்கட்குத் தாய்மொழிப் பற்றின் இன்றியமையாமையை நன்கு விளக்குகின்றார். ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழியும், அவர்கள் லாழும் நாடும் பாழ்படும் என்று மொழியுணர்வின் சிறப்பை வலியுறுத்துகிறார். தமிழ் மொழியின் சிறப்புகளைத் திறம்படக் காட்ட முற்பட்டு, நம் தாய்மொழியாகிய தமிழில் 86,000 சொற்கள் உள்ளள; இலட்சக்கணக்கான சொற்களை உடையதெனக் கூறப்படும் ஆங்கிலத்திலும் அம்மொழிக்கே உரிய சொற்களைக் கணக்கெடுத்தால் 20,000-க்கு மேல் இல்லை என்று அமெரிக்க, இங்கிலாந்து அறிஞர் தம் கூற்றுக்களைக் கொண்டு நிறுவுகிறார்.

பிற நாட்டு இலக்கியங்களெல்லாம் அரசியல், சமயம் முதலிய பிற துறைகளைச் சார்ந்தே ஒழுக்கத்தை வளர்க்கின்றன. ஆனால் தமிழ்மொழிபில் மட்டுமே ஒழுக்கத்தையே பொருளாகக் கொண்ட இலக்கியங்கள் உள, இவ்வாறு