பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

பெருமானார் அவர்களுக்கு யூதர்கள் ஒரு தூது அனுப்பினார்கள்.

அதாவது, "முஸ்லிம்களில் முப்பது பேரை, யூதர்கள் குறிப்பிடக்கூடிய இடத்துக்குக் கூட்டிக்கொண்டு வருமாறும், தாங்களும் தங்களுடைய மதகுருமார்களைக் கூட்டிக் கொண்டு அங்கு வருவதாகவும், அவர்களுக்குப் பெருமானார் அவர்கள் சமய போதனை செய்ய வேண்டும் என்றும், அந்தப் போதனையினால், மதகுருமார்கள் மனம் மாறி, முஸ்லிம்கள் ஆவதானால் தங்கள் கூட்டத்தார் அனைவருமே அதைப் பின்பற்றுவதில் ஆட்சேபணை இல்லை" என்றும் சொல்லி அனுப்பினார்கள்.

ஆனால், பெருமானார் யூதர்களின் வார்த்தைகளை நம்ப முடியாது என்றும், புதிய உடன்படிக்கை ஒன்று செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினார்கள்.

பனூநலீர் கூட்டத்தார் அதற்குச் சம்மதிக்கவில்லை.

அவர்களில் பனூகுறைலா கூட்டத்தார் மட்டும் முஸ்லிம்களுடன் செய்துகொண்ட