பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84


அக்கூட்டத்தினர் இஸ்லாத்தில் சேர்ந்ததோடு தாங்கள் இஸ்லாத்தில் சேர்ந்திருப்பதை, அறிவிப்பதற்காக வேண்டிக் கூட்டம் கூட்டமாகப் பெருமானார் அவர்களிடம் தூது வந்தார்கள்.

சில கூட்டத்தாருக்கு, இஸ்லாத்தின் மீது ஆரம்பத்திலிருந்த வெறுப்பும், பகைமையும் நீங்கியது. பெருமானார் அவர்களின் வாயிலாக, நேரில் இஸ்லாத்தின் சிறப்பை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவாவுடன் மதீனாவுக்கு வந்தார்கள், பெருமானார் அவர்களைக் கண்டு மகிழ்ந்து உரையாடி இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

ஹிஜ்ரி ஒன்பதாவது வருடத்திலேதான் அத்தகைய தூதுக் குழுக்கள் அதிகமாக வந்தன. ஆகையால், அந்த வருடத்திற்கு வரலாற்றுப் பேராசிரியர்கள் "தூது வருடம்" எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.


50. ஆடம்பரமும் அகம்பாவமும் அடங்கியது

பனூதமீம் என்னும் கோத்திரத்தார் மிகவும் ஆடம்பரத்தோடு மதீனாவுக்கு வந்து, நேராகப் பள்ளி வாசலுக்குச் சென்றார்கள். முக்கிய