பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


அது முதல் சில நாட்கள் வரை அபூபக்கர் அவர்களே தொழுகையில் தலைமையாயிருந்து நடத்தி வந்தார்கள்.


52. இறுதிச் சொற்பொழிவு

பெருமானார் அவர்களுக்கு ஒருநாள் உடல் நலமாக இருந்தது. குளித்து விட்டு, அலீ, அப்பாஸ் (ரலி) ஆகியோரின் துணையோடு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.

அப்பொழுது, பள்ளிவாசலில் அபூபக்கர் அவர்களே தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்கள் அங்கே வருவதை அறிந்து, அபூபக்கர் அவர்கள் தங்கள் இடத்திலிருந்து விலகினார்கள் அங்கேயே நிற்கும்படி சமிக்ஞை செய்துவிட்டு, அவர்களின் பக்கமாயிருந்து பெருமானார் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.

தொழுகை முடிந்ததும் பெருமானார் அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அதுவே பெருமானார் அவர்களின் கடைசிக்கு முன்பு இருந்த கூட்டத்தார் தங்களுடைய நபிமார்கள், பெரியோர்களின் அடக்கத்