பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்


மேலைக்கடல் ஒரம் தோற்கடித்த நாளில் அவர்கள் போட்டுவிட்டுச் சென்ற வேல்களை எண்ணியிருக்கிறாயா?

“அதை எப்படி எண்ண முடியும்”

“ஆய் பரிசளித்த யானைகளை எப்படி அண்ணே எண்ண முடியும்?” வேல்கள் எத்தனை-யானைகள் அத்தனை!


43. காடும் பாடியதோ?

அழகிய காடு. வானளாவிய மரங்கள் தண்ணிர்த் கடாகங்கள். ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள் எங்கும் எழில் தவழ்கிறது. குன்று போன்ற யானைகள் உலவுகின்றன. எங்குப் பார்த்தாலும் யானைக் கூட்டம். இந்தக் காட்டில் இத்தனை யானைகளா? அற்புதம்தான். எங்கிருந்து வந்தன இத்தனை யானைகள். இந்தக் காடு ஆய் வள்ளலின் மலையைப் பாடியிருக்குமோ? ஆயின் மலை தந்த பரிசிலாகத் தான் இருக்க வேண்டும் இந்த யானைகள்!


44. வடக்கும் தெற்கும்

வடக்கே இமயமலை. விண்ணைத் தொடும் வண்ண மலை அது. அங்குள்ள சுனையிலுள்ள குவளை மணக்கும். மான்கள் நரந்தம் புல்லை மேயும். சுனையில் நீர் பருகும். பெண் மானோடு விளையாடும்.

அதற்கு இணையாக தெற்கே இருப்பது ஆய் நாடு. வடக்கே இமயமும் தெற்கே ஆய்நாடும் இல்லாவிடில் உலகமே நிலை கலங்கிவிடும்.