மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்
81
அவன் வெட்டிய பஃறுளி யாற்று மணற் பரப்பைப் பாரும்!
அம்மணலிலும் பற்பலவாய்க் குடுமியின் வாழ்நாட்கள் பெருகுக!
இளஞ்சேட் சென்னி சிறந்த மன்னன். எதையும் செம்மையாகச் செய்வான். ஒன்றைச் செய்து பின் வருத்தப்படமாட்டான். பார்த்தவுடன் எவரையும் தெரிந்து கொள்வான். கோள் சொல்லைக் கேட்க மாட்டான். புகழ் பாடுவோரை நம்பான். அவன் பிறர் செய்யும் குற்றத்தை நன்கு ஆராய்வான். நடு நிலை தவறாமல் தண்டனை அளிப்பான். தவறு செய்தவன், காலடியில் வீழ்ந்து மன்னிப்புக்-கேட்டால் தண்டனையைக் குறைப்பான்; அவனிடம் முன்னிலும் அதிகமாக அன்பு காட்டுவான். புலவரெல்லாம் அவன் புகழ் பாடினர்.
பெருங் கடுங்கோ சேரவேந்தன். அவன் ஆறு வளம் மிக்கது. அவ்வூர்ச் சிறுமியர் ஆற்றில் நீராடுவர். ஆற்று மணலில் சிற்றில் கட்டுவர். பாவை செய்து அதற்கு மாலை சூட்டுவர். மக்கள் உள்ளத்தில் கலை வாழ்ந்தது. மகிழ்ச்சி தவழ்ந்தது.
பாணனும் பாடினியும் அவனைப் பார்க்கச் சென்றனர். அவன் வீரத்தைப் புகழ்ந்து பாடினாள் பாடினி. பாணன் ஒத்துப் பாடினான். பாடினி பல கழஞ்சுப் பொன்னால் ஆன பொற்கொடியைப் பரிசாகப்