இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
96
மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்
கொல்லன் கடமை வேல் வடித்தல் உன் கைவேல் அதனைக் காட்டுகிறது. மன்னனும் உனக்கு நல்வாழ்வ. அளிக்கத் தவறவில்லை.
“தாயே, நான் என் கடமையைச் செய்யப் புறப்பட்டுவிட்டேன். வாழ்த்தி விடை கொடுங்கள்” என்றான்.
“போருக்குப் போய்வா. களிறு எறிந்து பெயர்தல் உன் கடன்”