பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


கூவுகிறது, வானம்பாடி அகவுகிறது, காகம் கத்துகிறது என்று கூறுதல் மரபு வழுவாகும். வாழைக்கன்று, தென்னம் பிள்ளை, மான் கன்று, ஆட்டுப் பிழுக்கை, மாட்டுச் சாணம் என்று கூறுவதே மரபாகும். அவ்வாறு அல்லாது வாழைப்பிள்ளை, தென் னங்குட்டி, மான் பிள்ளை, ஆட்டுச் சாணம், மாட்டுப் பிழுக்கை என்று கூறுதல் மரபு வழுவாகும். "எப்பொருளை எச்சொல்லால் அறிவுடையோர் எவ்வாறு வழங்கினர்களோ அப்பொருளை அச் சொல்லால் அவ்வாறே வழங்குதலே மரபாகும்.” 10. உவமைகளும் பழமொழிகளும் வைத்து எழுதுதல் ஊருணி நீர் யாவர்க்கும் பயன்படுதல் போன்று ஒப்புரவாளன்கண் பட்ட செல்வம் யாவர்க்கும் பயன்பட்டு நிற்கும். -- தீப்பட்ட வீட்டில் பிடிங்கினது ஆதாயம் என்ற நிலையில் நீ இவ்வேளையில் என் பொருட்களை எடுக்க வந்தாயா? + இவற்றிலுள்ள உவமையும் பழமொழியும் கருத்தைத் தெளிவாக விளக்குவதோடு மொழியின் நடையையும் இனிதாக்குகின்றன. "எண்ணங்களைத் தெளிவாக உவமைகளின் மூலமும் பழமொழிகளின் மூலமும் விளக்கலாம்.'