பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


ட், ண்-இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவை இரண்டும் வாயைத் திறத்தலுடனே நுனி நாக்கு மேல் வாயின் நுனிப் பகுதியைச் சேர்தலாகிய முயற்சி யால் பிறத்தலையறியலாம். "ட, ண என்ற இரு மெய்யெழுத்துக்களும் வாயைத் திறத்தலுடனே நுனிநாக்கு மேல் வாயின் நுனிப் பகுதி யைச் சேர்த்தலாகிய முயற்சியால் பிறக்கும்.” குத்திரம்: 'கங்வும் சஞவும் டணவும் முதலிடை நுனிநா அண்ணம் உறமுறை வருமே." த், ங்-இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார் வாய் திறத்தலோடு மேல்வாய்ப் பல்லின் அடியை நாக் கின் நுனி பொருந்தும் முயற்சியால் இவை பிறத்தலை அறியலாம். o "வாய் திறத்தலோடு மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்தும் முயற்சியால் த, ந என்ற இரு மெய்யெழுத்துக்களும் பிறக்கும்.' குத்திரம்: 'அண்பல் அடிகா முடியுறத் தக வரும்.' ப், ம்-இம்மெய் யெழுத்துக்களை உச்சரித்துப் பார். வாய் திறத்தலோடு மேலுதடும் கீழுதடும் தம்மில் பொருந் தும் முயற்சியால் இவை பிறத்தலை யறியலாம். “வாய் திறத்தலோடு மேலுதடும், கீழுதடும் தம்மில் பொருந்தும் முயற்சியால் ப, ம என்ற இரு மெய் யெழுத் துக்களும் பிறக்கும்.”