பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குத்திரம்: 'மீகீழ் இதழ் உறப் பம்மப் பிறக்கும்.' ய்-இம்மெய் யெழுத்தை உச்சரித்துப்பார். இது வாயைத் திறத்தலோடு நாக்கின் அடியானது மேல் வாயடியைப் பொருந்தும் முயற்சியால் பி ற த் த லை க் காணலாம். "வாய் திறத்தலுடனே நாக்கின் அடியானது மேல் வாய் அடியைப் பொருந்தும் முயற்சியால் ய என்ற மெய் யெழுத்துப் பிறக்கும்.” சூத்திரம்: அடிகா அடியணம் உறயத் தோன்றும்.' ர், ழ்,- இவ்விரண்டு மெய்யெழுத்துக்களை உச்சரித் துப் பார். இவை வாய் திறத்தலுடனே நாக்கின் நுனி மேல் வாயைத் தடவும் முயற்சியால் பிறப்பதைக் காணலாம். "வாய் திறத்தலோடு நாக்கின் நுனி மேல் வாயைத் தடவும் முயற்சியால் ர, ழ என்ற இரு மெய்யெழுத்துக் களும் பிறக்கும்.” குத்திரம்: "அண்ணம் நுனிநா வருட ரழ வரும்." ல், ள் - இம்மெய்யெழுத்துக்களை உச்சரித்துப் பார். இவைகள் வாய் திறத்தலோடு மேல் வாய்ப் பல்லின் அடியையும், மேல் வாயையும் முறையே நாக்கின் ஒர மானது தடித்துப் பொருந்தும், தடவும் முயற்சியால் பிறத்தலை யறியலாம்.