பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


காலத்திற்ை செய்த நன்றி - இங்கு காலம் கருவிப் பொருளாகாமல் இடப் பொருளாய் நிற்கின்றது. காலத் தின் கண் செய்த நன்றி என ஆறுருபைக் கண்ணுரு பாகத் திரித்துக் கொள்ள வேண்டும். 'அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்.” இங்கு தவ்வை செயப்படு பொருளாகாமல் ஏற்றுக் கொள்ளுதல் பொருளாய் நிற்கின்றது. தவ் வைக்குக் காட்டி விடும்’ என ஐ உருபைக் 'கு'வ் வரு பாகத் திரித்துக் கொள்ள வேண்டும். (பொருமையுள்ள வ?ன இலக்குமி மூதேவிக்குக் காட்டி விடுவாள் என்பது இதன் பொருள்.) = புலியோடு ஒத்தான் - இதில் புலி உடனிகழ்ச்சிப் பொருளில் வராமல் செயப்படு பொருளாய் நிற்கின்றது. புலியை என ஒடு உருபை ஐ உருபாகத் திரித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 'எந்த வேற்றுமை உருபால் எந்த வேற் றுமைப் பொருள் சொல்லப்பட்டதாயினும் உருபு சென்ற வழியே பொருள் சேராமல் அப்பொருள் சென்ற வழியே அவ்வுருபு சேருவதே உருபு மயக்கமாம்.” குத்திரம்: 'யாதன் உருபில் கூறிற்று ஆயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும்.' குறிப்பு:- உருபு மயக்கத்தையே வேற்றுமை மயக்கம் என்றுங் கூறுவர். 8. வினைச்சொல் இலக்கணம் (விரிவாக) செயப்படுபொருள் குன்ரு வினை, குன்றிய விணே வ%னந்தான் - இது குடத்தை வனைந்தான் என்று செயப்படுபொருள் குறையாது கொண்டு வந்த வினை. ஆகவே இது செயப்படுபொருள் குன்ரு வினையாகும்.