பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


வந்தது - இது செயப்படுபொருள் குன்றிய வினை. ஆகவே இது செயப்படுபொருள் குன்றிய வினையாகும். "செயப்படுபொருளைக் கொண்ட வினையே செயப் படுபொருள் குன்ரு வினையாம். செயப்படுபொருளை வேண்டாத வினையே செயப்படுபொருள் குன்றிய வினை யாம்.” தன் வினை, பிறவினை கண்ணன் கண்டான் - இதில் க ண் ண ன கி ய கருத்தா தானே தொழிலைச் செய்தான் என்பதைக் கண் டான்' என்ற வினைமுற்றுக் காட்டுகிறது. இவ்வாறு வருவதே தன்வினை. வேலன் முருகனைப் படிப்பித்தான். இதில் வேலன் என்ற கருத்தா தொழிலைச் செய்வித்தான் என்று படிப் பித்தான் என்ற வினைமுற்றுக் காட்டுகிறது. இவ்வாறு வருவதே பிறவினையாம். 'கருத்தா தானே தொழிலைச் செய்வதே தன் வினை யாம். கருத்தா பிற கருத்தாவைக் கொண்டு தொழிலைச் செய்விப்பதே பிற வினையாம்'. உடன் பாட்டு வினை, எதிர்மறை வினை உடன்பாட்டு வினை எதிர்மறை வினை கற்றேன் - கற்றிலேன் சென்றேன் செல்லமாட்டேன் இவற்றுள் கற்றேன், சென்றேன் என்ற வினைமுற் றுக்கள் செயல் நிகழ்ந்ததைத் தெரிவிக்கின்றன. இவ் வாறு வருவதே உடன்பாடு. கற்றிலேன், செல்லமாட்டேன் என்ற வினைமுற்றுக் கள் செயல் நிகழாமையைத் தெரிவிக்கின்றன. இவ்வாறு வருவது எதிர்மறை.