பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


9. காலங்காட்டுவன (பகுதி, விகுதி) சூத்திரங்கள். - ஒரு வினைச் சொல்லில் இடைநிலையே பெரும்பாலும் காலம்காட்டும். த், ட், ற், இன் என்பன இறந்தகால இடைநிலைகள். கிறு, கின்று, ஆநின்று என்பன நிகழ் கால இடைநிலைகள். ப், வ், என்பன எதிர்கால இடை நிஜலகள். (இவைகளை நீங்கள் முன் வகுப்புக்களில் புடித்துள்ளீர்கள்). --- - இடைநிலையே யன்றி வினைச் .ெ சா ற் க ளி ன் முதலிலுள்ள சில பகுதிகளும் விகுதிகளும் காலங்காட்டும் பகுதி காலங் காட்டுதல் புகு - புக்கான் - இதில் 'கு' என்ற உ யி ர் .ெ ம ய் ஈற்றுப் பகுதி தன் ஒற்று இரட்டித்து இறந்த காலங் காட்டிற்று. விடு - விட்டான் - இதில் டு என்ற உயிர் மெய் ஈற்றுப்பகுதி தன் ஒற்று இரட்டித்து இறந்த காலங் காட்டிற்று. - உறு - உற்ருன் - இதில் று’ என்ற உயிர்மெய் ஈற்றுப் பகுதி தன் ஒற்று இரட்டித்து இறந்த காலங் காட்டிற்று. --- "கு, டு, று என்னும் மூன்று உயிர்மெய்களை இறுதி யாகவுடைய சில குறிப்பு வினைப் பகுதிகள் தம் ஒற்று இரட்டித்து இறந்த காலங் காட்டும்.” விகுதி காலங் காட்டுதல் சென்று (சென்றேன்); சென்றும் (சென்ருேம்) - இவற்றில் “று', 'றும் என்ற விகுதிகள் இறந்த காலங் காட்டின