பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


'செயலும் காலமும் விளக்கி, பாலும், கொண்டு. முடியும் வினையும் குறைய நிற்பதே தெரிநிலை வி யெச்சமும் குறிப்பு வினையெச்சமுமாம்.” --- சூத்திரம்: ' தொழிலுங் காலமுங் தோன்றிப் பால் வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே." குறிப்பு: தெரிநிலை வினையெச்சம் .ெ த ா ழி லு ம் , காலமும் தோன்ற நிற்கும், இருவகை வினையெச்சமும் பால், வினை ஒழிய நிற்கும். (உ-ம்) கண்டு சென்ருன் - இதில் கண்டு எ ன் ப து i தெரிநிலை வினேயெச்சம். இன்றிக் காண் ட இதில் இ ன் றி என்பது குறிப்பு வினையெச்சம். இறந்த கால வினையெச்ச வாய்பாடு நடந்து வந்தான் - இதில் நடந்து எ ன் ப து "செய்து எ ன் னு ம் வாய்பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங் காட்டிற்று. உண்குபு (உண்டு) போனன் - இதில் உண்குபு. என்பது செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்' இது இறந்த காலங் காட்டிற்று. பெய்யா (பெய்து) கொடுக்கும் - இதில் பெய்யா என்பது செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங் காட்டிற்று. கானு (கண்டு) மகிழ்ந்தான், - இதில் கானுT’ வென்பது செய்யூ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங் காட்டிற்று.