பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


உண்டென (உண்டதல்ை) போனன் - இதில் 'உண்டென வென்பது செய்தென என்னும் வாய் பாட்டு வினையெச்சம். இது இறந்த காலங் காட்டிற்று. நிகழ்கால வினையெச்ச வாய்பாடு நடக்க வல்லன் - இதில் நடக்க'வென்பது செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது நிகழ்காலங் காட்டிற்று. எதிர்கால வினையெச்ச வாய்பாடுகள் வரிற் (வந்தால்) கொள்ளும்-இதில் வரின் என்பது "செயின்’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது எதிர்காலங் காட்டிற்று. ஆடிய (ஆடுதற்கு) தந்தான் - இதில் 'ஆடிய' வென்பது செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது எதிர்காலங் காட்டிற்று. உண்ணியர் உண்ணுதற்கு வருவான் - இதில் 'உண்ணியர்' என்பது செய்யியர்' என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இது எதிர்காலங் காட்டிற்று. கொல்வான் (கொல்லுதற்கு) சென்றது - இ. தி ல் 'கொல்வான்’ என்பது வான்’ என்னும் விகுதி பெற்று எதிர்காலங் காட்டிற்று. தின்பான் புகுந்தது - இதில் 'தின்பான்' என்பது 'பான்’ என்னும் விகுதி பெற்று எதிர்காலங் காட்டிற்று. செய்பாக்கு (செய்வதற்கு) வந்தான் - இதில் செய் பாக்கு என்பது பாக்கு என்னும் விகுதி பெற்று எதிர் காலங் காட்டிற்று.