பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


'செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென என்ற ஐந்து வாய்பாடுகளும் இறந்த காலங்காட்டும் வினையெச்ச வாய்பாடுகளாம்.' - செய’ என்ற வாய்பாடு நிகழ் காலங் காட்டும் வினை யெச்ச வாய்பாடாம். "செயின், செய்யிய, செய்யியர் என்ற வாய்பாடுகளும் 'வான், பான், பாக்கு’ என்ற விகுதிகளையுடைய சொற் களும் எதிர்காலங் காட்டும் வினையெச்ச வாய்பாடுகளாம்’ சூத்திரம்: 'செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச் செயின் செய்யியர் வான் பான் பாக்கின வினை யெச்சம் பிற ஐந்து ஒன்று ஆறு முக்காலமும் முறைதரும்.” குறிப்பு: நிகழ் காலத்திற்குக் கா ட் டி ய செயவெனெச்சம் காரணப் பொருளதாம் பொழுது இறந்த காலத்திலும் உடனிகழ்ச்சிப் பொருளதாம் பொழுது தனக்குரிய நிகழ்காலத்திலும், காரியப் பொருளதாம் பொழுது எதிர்காலத்திலும் வரும். (உ-ம்) மழை பெய்ய நெல் விளைந்தது - இறந்த காலம் சூரியன் உதிக்கச் சாத்தன் வந்தான் - நிகழ் காலம் நெல் விளைய மழை பெய்தது - எதிர் காலம் இவற்றுள் பெய்ய என்பது பெய்தலால் எனப் பொருள்பட்டு விளைதலுக்குக் காாணமாகியும், உதிக்க’ வென்பது உதிக்கையில் எனப் பொருள் பட்டு வருத லோடு உடன் நிகழ்கிறதாகியும், விளைய வென்பது "விளையும்படி எனப் பொருள் பட்டுப் பெய்வதன் காரிய மாகியும் நிற்கின்றன.