பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


"யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று ஆம், தாம், தான், கின்று, நின்று - என்பவை எல்லா விடத்தும் வரும் அசைச் சொற்களாம்.” குத்திரம்: “யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும் சின் குரை ஒரும் போலும் இருந்து இட்டு அன்று ஆம் தாம்தான் கின்று நின்று அசைமொழி.' 17. உரிச்சொல் (தட, வை) வலிதுஞ்சு தடக்கை - இதில் தட' என்பது உரிச் சொல். இது பெருமை என்ற பொருளில் வந்தது. --- வைநுனைப் பகழி - இதில் வை’ என்பது உரிச் சொல். இது கூர்மை என்ற பொருளில் வந்தது. 'தட என்ற உரிச்சொல் பெருமை என்ற பொருளி லும், வை என்ற உரிச்சொல் கூர்மை என்ற பொருளி லும் வரும்.”