பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


இனமுள்ளவற்றை அடை கொடுத்துக் கூறுதல் வழா நிலையும், இனமில்லாதவற்றை அடை கொடுத்துக் கூறுதல் வழுவமைதியுமாம். 'பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு அடை மொழிகளால் அ டு க் க ப் பு ட் ட சொற்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இரண்டிடத்தும் இனமுள்ளனவாயும், இனமில்லாதன வாயும் வரும்.” | -- ■ குறிப்பு: அடை மொழிகள் மேற் கூறியவாறு இனத்தைத் தருதலோடு இனம் அல்லாததையும் தரும். ib( பாவம் .ெ ச ய் த வ ன் நரகம் புகுவான் - இதில்-سه) ù புண்ணியம் செய்தால் சுவர்க்கம் புகுவான் ’ Gחהסה5דה இனத்தைத் தருவதோடு, அவன் இது செய்த" இது வரும் என்று அறியாத அறிவிலி' என்னும் இன மல்லாததையும் தந்தது. அடை மொழிகள் சினையையும் முதலையும் விசேடித்து வரும். (உ-ம்) வேற்கை முருகன் - இதில் வேல்' என்ற அடை மொழி கையா கிய சினையையும், முருகனுகிய முதலை யும் சிறப்பித்து வந்தது. - மனைச் சிறு கிணறு - இதில் மனை, சிறு' என்ற இரண்டு அடைமொழிகளும் முதலாகிய கிணற்றைச் சிறப்பித்து வந்தன. == கரு நெடுங்கண் – இதில் கருமை, நெடுமை’ என்ற இரு அடைமொழிகளும் கண்' என்ற சினே யைச் சிறப்பித்து வந்தன.