பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கணம் பத்தாம் வகுப்பு 1. எழுத்து எழுத்துக்களின் இடமுயற்சிப் பி ற ப் பு சூத்திரங்கள். எழுத்துக்களின் பிறப்பு - பொதுவிலக்கணம். _ அ, ஆ, - இவ்வெழுத்துக்களை உச்சரித் துப் பார். இவற்றை உச்சரிக்கும் பொழுது உடலின் உள்ளிருக்கும் காற்ருனது உயிரினது முயற்சியால் வெளி வருகின்றது. அப்பொழுது அண்ணம் திறக்கப்படுகின்றது. அ, ஆ, என்ற ஒலிகள் கண்டத்தினின்று எழுகின்றன. - t க - இவ்வெழுத்தை உச்சரித்துப் பார். வாய் திறக் கப்படுகின்றது. அப்பொழுது அடிநாக்கு மேல் வாய் அடியைச் சேர இவ்வொலி மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றது. இவை போல மற்றைய எழுத்துக்களும் பிறக்கின்றன. 'உடலின் உள்ளே இருக்கும் காற்ருனது உச்சரிக்க வேண்டுமென்ற உயிரினது முயற்சியால் எழுப்பப்பட்டு செவிப் புலனும் அணுத்திரளின் கூட்டம் மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகிய நான்கு இடங்களையும் பொருந்தி இதழ் (உதடு) நாக்கு, பல், அண்ணம் (ம்ேல் வாயும் கீழ் வாயும்) ஆகிய நான்கினுடைய முயற்சி ே பாட்டால் பலவகைப்பட்ட எழுத்துக்களாலாகிய ஒ ை சிகளர் ய் த் தோன்றுதலே எழுத்துக்களின் பிறப்பாகும்.”