பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எழுத்துக்களின் இடப்பிறப்பு

அ-என்பது உயிரெழுத்து. - இதை உச்சரித்துப் பார். இது கண்டத்தினின்று பிறப்பதை அறியலாம்.

க்-என்பது மெய்யெழுத்தில் வல்லினம் ஆகும். இதை உச்சரித்துப் பார். இது மார்பை இடமாகக்கொண்டு பிறத்தலை அறியலாம்.

ங்-என்பது மெய்யெழுத்தில் மெல்லினமாகும். இதை உச்சரித்துப்பார். இது மூக்கை இடமாகக்கொண்டு பிறத்தலை அறியலாம்.

ய்-எ ன் ப து மெய்யெழுத்தில் இடையினமாகும். இதை உச்சரித்துப் பார். இது கண்டத்தை இடமாகக் கொண்டு பிறத்தலை அறியலாம்.

ஃ-இது ஆய்த எழுத்தாகும். இதை உச்சரித்துப் பார். இது தலையை இடமாகக் கொண்டு பிறத்தலை அறியலாம்.

  • மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய நான்கு இடங்களில் ஒலி பொருந்திப் பிறப்பதே இடப் பிறப்பாம்.”

எழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு

உ, ஊ-இவ்வெழுத்துக்களை உச்சரித்துப் பார் . இவை வாய் திறத்தலோடு உதடு குவிதலாகிய முயற்சி யால் பிறக்கின்றன.

இ, ஈ-இவ்வெழுத்துக்களை உச்சரித்துப்பார். இவை வாய் திறத்தலோடு மேல் வாய்ப்பல்லை அடிநாக்கின் ஒரமானது பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.