பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


தேக்குடம் தேக் குழம்பு தேங்குடம் தேங் குழம்பு இவற்றில் வருமொழி முதலில் வலி முதலாயிற்று. மேற்கூறியவற்றில் இருவழியிலும் வருமொழி முதலில் வல்லெழுத்து வர தேன் என்னும் சொல் இயல் பும், வலி மிகலும், மெலி மிகலும் பெற்று வந்தது. தேன் + குடம் E- 懿担"... = ខ្ទឹ "தேன் என்னுஞ் சொல் மூன்று இனமெய்களும் வருமொழி முதலில் வந்தால் இதிலுள்ள 'ன'கரமெய் இயல்பாதலும் மெல்லினம் வந்தால் அம்மெய் கெடுதலும் வல்லினம் வந்தால் அம்மெய் இயல்பாதலே யன்றிக் கெடுதலும், அதற்கு இனமான மெல்லினம் மிகுதலும் ஆகும். சூத்திரம்: ‘'தேன் மொழி மெய்வரின் இயல்பும் மேன்மை மேவின் இறுதி அழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலும் ஆம் இருவழி.' 4. செய்யுள் விகாரம் 1. குறுத்தாட் பூதம் - இதில் குறுந்தாள்’ என் பது வலிந்து வந்தது 2. தண்டையினினக் கிளி- இதில் தட்டை என்பது மெலிந்து நின்றது. 3. கற்பக நீழல் - இதில் நிழல்' என்பது -- நீண்டு நின்றது. * 4. நன்றென்றேன் தியேன்- இதில் "தீயேன்” என்பது குறுகி நின்றது.