பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


முதலில் வந்த துறைவா’ என்ற சொல் நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். இரண்டாவது சொல் இடத்தைக் குறிக்கும். கனிவா யிவள்புலம்பக் காவல நீ நீங்கில் இனியா ரினியா ரெமக்குப்-பனிநாள் இருவராத் தாங்கு முயிரன்றி யெங்குண் டொருவராத் தாங்கு முயிர். - _ இப்பாவில் இரண்டாமடியில் இனியார் என்ற சொல் ஒன்றே மடங்கி வந்து வேறு பொருள் கொண்டது. முதலில் வந்த இனியார் என்ற சொல் இனிமையான வார்த்தை சொல்லுகின்றவர்’ என்ற பொருளைத் தரும். இரண்டாவது சொல் இனிமேல் யார் இருக்கிருர்? என்ற பொருளைத் தரும். மேற்கூறியவாறு வந்த சொல்லே வந்து வெவ்வேறு பொருளைக் கொண்டு விளங்குவதே மடக்கு. இது யமகம் என்றும் பெயர் பெறும். “எழுத்துக்களது தொகுதி, பிற வெழுத்தானும், சொல்லானும், இடையிடாதும் இடையிட்டும் வந்து திரும்பவும் வேறு பொருளை விளைப்பது மடக்கணியாம்.” 5. வஞ்சகப் புகழ்ச்சி யணி தேவர் அனையர் கயவர் அவருந்தான் மேவன செய்தொழுக லான். இதில் கயவர்களைத் தேவர்களைப் போன்றவர்கள் என்று புகழ்வது போலக் கூறி, தன் மனம் போன்று