பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

, 'முதலில் இரண்டு பொருள்களுக் கிடையேயுள்ள, ஒப்புமையைக் கூறி, அதன்பிறகு அவற்றுக்கிடையே, யுள்ள வேற்றுமையைக் கூறுவதே வேற்றுமையணியாம். 3. சிலேடையணி வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும் போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில் வைக்கோலும் மால்யானை யாம். இப்பாவில் முதல் இரண்டடிகளில் 'யானை வீரரைத். துதிக்கையால் வாரி எடுத்துப் போர்க்களத்தில் அடிக்கும். அரணில் புகும். போரில் சிறந்து விளங்கும்.’’ என்ற கருத்தை விளக்கி விட்டு, பின் அவ்வடிகளுக்கே வைக் கோல் வாரி எ டு த் து நெற்களத்தில் அடிக்கப்படும், கோட்டையாகக் கட்டப்படும். வைக்கோற் போராய் விளங்கும்,' என்று .ெ பா ரு ள் கொள்ளுமாறு வைத் துள்ளார். இவ்வாறு ஒரு சொல்லோ, தொடரோ இரு பொருள் தருமாறு கூறுவதே சிலேடையணி. "ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு கூறுவதே சிலேடையணியாம்.” 4. மடக்கணி. துறைவா துறைவார் பொழிற்றுனைவர் நீங்க உறைவார்க்கு முண்டாங்கொல் சேவல் - சிறைவாங்கிப் பேடைக் குருகாரப் புல்லும் பிறங்கிருள்வாய் வாடைக் குருக மனம். இப்பாவில் முதலடியில் துறைவா’ என்ற சொல் ஒன்றே மடங்கி வந்து வேறு பொருள் கொண்டது.